நச்னு ஒரு பதில்
ஜூன் 17, 2007
ஆனந்த விகடன் ஹாய் மதன் பகுதியில் மதனின் பதில்கள் முக்கால்வாசி நீளமான சரித்திர லெக்சர்களாவே இருக்கும். இந்த வாரம் ஒரு கேள்விக்கு அவர் சொன்ன அபூர்வமான நச் பதில் என் நெஞ்சில பச்சக்னு ஒட்டிக்கிச்சு.
கேள்வி: ஆவதும் பெண்ணாலே… சரி! அழிவதும் பெண்ணாலே, எப்படி?
பதில்: மற்றவர் மீது பழி போடுகிற புத்தியில் விளைந்த அபத்தமான கருத்து அது. முதல் வேலையாக, ‘பெண்ணாலே’ என்பதை ‘நம்மாலே’ என்று மாற்ற வேண்டும்.
ஆவதும் பெண்ணாலே, அழிவதும் பெண்ணாலே, அவனாலே, இவனாலேன்னு எல்லாத்துக்கும் அடுத்தவர் மேல பழி போடாம, நம்மோட வெற்றி தோல்விக்கு நாமே பொறுப்பெடுத்துகிட்டா நம்மோட ஆற்றல் பன்மடங்கு உயரும்கிறது சத்தியம். ஸ்பைடர்மேன் திரைப்படத்தில் எனக்கு பிடித்த ஒரு டயலாக் “With great power comes great responsibility”. “ஆற்றல் அதிகரிக்கும்போது பொறுப்புகளும் கூடுகிறது”, அப்படின்னு மொழிபெயர்க்கலாம். இதை கொஞ்சம் உல்டா பன்னி இப்படியும் சொல்லலாம், “நம் பொறுப்புணர்வு அதிகரிக்கும்போது கூடவே நம் ஆற்றல்களும் வளர்கிறது.”
பொறுப்புணர்வு பத்தி பேசும்போது விவேகானந்தர் சொன்ன இந்த வார்த்தைகள் ஞாபகத்துக்கு வருது.
‘நான் அனுபவித்துக் கொண்டிருக்கும் இந்தத் துன்பம், என்னுடைய சொந்தச் செயல்களாலேயே உருவாக்கப்பட்டிருக்கிறது. இந்த ஒரு நிலையே, என் ஒருவனால் மட்டுமே அது நீக்கப்பட வேண்டும் என்பதைக் காட்டுகிறது’ என்று சொல். நான் எதைப் படைத்தேனோ அதை என்னால் அழிக்கவும் முடியும். பிறரால் படைக்கப்பட்ட ஒன்றை ஒருபோதும் என்னால் அழிக்க முடியாது. எனவே, எழுந்து நில். தைரியமாக இரு. வலிமையுடன் இரு. பொறுப்பு முழுவதும் உன் தோள் மீதே சுமந்துகொள். உனது விதியைப் படைப்பவன் நீயே என்பதைப் புரிந்துகொள். உனக்குத் தேவையான எல்லா வலிமையும் உதவியும் உனக்குள்ளேயே குடிகொண்டிருக்கின்றன.
ஆமாம். ஆவதும் நம்மாலே, அழிவதும் நம்மாலே.
Entry Filed under: சுயமுன்னேற்றம், பொறுப்புணர்வு, மதன், விவேகானந்தர். .
9 Comments Add your own
Leave a Comment
Some HTML allowed:
<a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <pre> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>
Trackback this post | Subscribe to the comments via RSS Feed
1.
வடுவூர் குமார் | ஜூன் 17, 2007 at 10:49
அந்த விவேகானந்தர் கருத்து,சும்மா அட்டகாசமாக இருக்கு.
2.
குட்டிபிசாசு | ஜூன் 17, 2007 at 10:57
அறிவுரை நல்லா இருக்குபா!
3.
RAJAGOPAL | ஜூன் 17, 2007 at 11:08
தீதும் நன்றும் பிறர் தர வாரா
அன்புடன்
இராசகோபால்
4.
செல்வேந்திரன் | ஜூன் 17, 2007 at 11:12
நன்றாக இருந்தது.
மிக்க அன்புடன்
செல்வேந்திரன்
5.
Friendly Fire | ஜூன் 17, 2007 at 11:43
வடுவூர் குமார், குட்டிபிசாசு, இராசகோபால், செல்வேந்திரன், தங்கள் அனைவரது வருகைக்கும் பின்னூட்டங்களுக்கும் நன்றி
6.
sivaramang | ஜூன் 17, 2007 at 12:43
மிகவும் நல்ல கருத்துக்கள். பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி.
7.
Friendly Fire | ஜூன் 17, 2007 at 15:08
வருகைக்கு நன்றி சிவராமன்!
8.
DAYALAN | பெப்ரவரி 20, 2009 at 4:30
too good
super
9.
kalaipithan | ஏப்ரல் 12, 2009 at 20:38
எழுந்து நில். தைரியமாக இரு. வலிமையுடன் இரு. பொறுப்பு முழுவதும் உன் தோள் மீதே சுமந்துகொள். உனது விதியைப் படைப்பவன் நீயே என்பதைப் புரிந்துகொள். உனக்குத் தேவையான எல்லா வலிமையும் உதவியும் உனக்குள்ளேயே குடிகொண்டிருக்கின்றன.With great power comes great responsibility”. என்னும் விவேகானந்தர் கருத்து அருமை,வலிமை.
அன்புடன்
மாங்காடு.கலைப்பித்தன்