புலிகளுடன் வாழும் புத்த பிட்சுக்கள்

ஜூன் 18, 2007

தாய்லாந்து நாட்டு காஞ்சனபுரி பகுதில இருக்கிற வாட் பா லுவாங்தா புவா புத்த ஆசிரமத்தில தான் இந்த அதிசயம் நடக்குது. இந்த ஆசிரமம் தொடங்கப்பட்ட 1994ஆம் வருஷத்திலேயிருந்தே மான், மயில் போன்றவை சுதந்திரமா சுற்றித் திரியும் விலங்குகளின் சரணாலயமாவும் இருந்துட்டு வருது. 1999ம் வருஷம் தான் இங்கே முதன்முதலா புலி வளர்க்க ஆரம்பிச்சாங்க. அப்போ கடத்தல்காரர்களால அனாதையாக்கப்பட்ட சில புலிக்குட்டிகள் ஆசிரமத்துக்கு வந்து சேர்ந்தது. இன்றைய நிலவரப்படி இந்த புத்த ஆசிரமத்தில பதினெட்டு புலிகள் பிட்சுகளோட வாழ்ந்துட்டு வருது.

புலியுடன் விளையாடும் புத்த பிட்சு

இந்த புலிகள் வாழும் புத்த ஆசிரமத்தை பத்தி கொஞ்ச நாள் முன்னாடி தொலைக்காட்சியில பார்த்தேன். பெரும்பாலான நேரம் சர்க்கஸ் புலிகள் மாதிரி இந்தப் ஆசிரமப் புலிகள் கூண்டுக்குள்ள அடைஞ்சு கிடந்தாலும் அப்பப்போ பிட்சுகளின் கண்காணிப்போட ஆசிரம வளாகம் முழுவதும் வலம் வருது, புத்தர் சிலைக்குப் பின்னாடி புலிக்குட்டிகள் ஒளிஞ்சு கண்ணாமூச்சி ஆடுது! தாய்லாந்து புத்த பிட்சுக்கள் ஒரு தாய் போல புலிக்குட்டிகளுக்கு (புட்டிப்) பாலூட்டி, தாலாட்டி உறங்க வைக்கிறாங்க. பிட்சுக்கள் பக்கத்திலே போய் அவர்கள் மீது பாசத்தோட புலிகள் உரசும் காட்சி அலாதியானது.

இறைச்சியை இரத்த வாடை வராம வேக வைச்சு உலர்த்தி புலிகளுக்கு உணவா கொடுக்கிறாங்க. என்ன தான் இருந்தாலும் புலிக்கு பிறந்தது பூனையாகுமா? சமயங்களில் அங்கே வாழும் மான்களையும் மத்த மிருகங்களையும் பார்க்கும் போது உறுமல், திமிறல் எல்லாம் கொஞ்சம் தலை காட்டத்தான் செய்யுது. ஆனாலும் புத்த பிட்சுக்கள் செல்லமா தட்டி, தடவிக்கொடுத்து அதட்டும்போது இந்த புலிகள் அப்படியே சாதுவா அடங்கிப் போயிடுது.

புத்த பிட்சுவுடன் புலிகள்

கடத்தல்காரர்களிடமிருந்து புலிகளைக் காப்பாற்றி அடைக்கலம் தந்து, அன்பினால அவைகளின் குணத்தையே மாற்றி, செல்லப் பிராணிகள் போல வளர்த்து வரும் இந்த புத்த பிட்சுக்கள் கண்டிப்பா புத்தர் வலியுறுத்திய ஜீவகாருண்யத்தை இன்னைக்கும் காப்பாத்திட்டு வராங்க.

மேலும் விவரங்களுக்கு பார்க்க: புலிக்கோயில் வலைத்தளம், புலிக்கோயில் பற்றிய தமிழ் விக்கிபீடியா கட்டுரை, விரிவான ஆங்கில விக்கிபீடியா கட்டுரை.

தாய்லாந்து நாட்டில மட்டும் இல்லை, உலகத்தின் மத்த பகுதிகளிலும் புலிகளும், புத்தரை பின்பற்றுவதா சொல்லிக்கிறவங்களும் அமைதியுடன் ஒற்றுமையா வாழனும்கிறது தான் என் விருப்பம். ;)

Entry Filed under: அன்பு, புலி, பௌத்தம், மனிதநேயம். .

1 Comment Add your own

  • 1. peter irudaya raj  |  ஆகஸ்ட் 9, 2009 at 9:09

    the news is good. weather these pudhists are similar with cylon pudhist or not i don’t know but they must read and know the above news and learn from them how to live.

    பதில்

Leave a Comment

Required

Required, hidden

Some HTML allowed:
<a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <pre> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Trackback this post  |  Subscribe to the comments via RSS Feed


குறிச்சொற்கள்

Uncategorized அன்பு ஆன்மீகம் இயற்கை ஊனம் எரிபொருள் கடவுள் சாதனை சிந்தனைகள் சுயமுன்னேற்றம் சுற்றுச்சூழல் தியானம் நம்பிக்கை நாத்திகம் நித்யானந்தர் புலி பெண்கள் பொறுப்புணர்வு பௌத்தம் மதன் மதுபானம் மனசாட்சி மனம் மனிதநேயம் மனிதன் மருத்துவம் யோகம் விஞ்ஞானம் விவேகானந்தர் வீடியோ

RSS என் புதிய தளம்

RSS என் தலைமையகம்

பதிவுலகம்

Tamil resources

website metrics