கழிவு மூலம் எரியும் தெருவிளக்குகள்

ஜூலை 9, 2007

சென்னையை அடுத்த திருநீர்மலையில் உள்ள TNHB காலனியில் கழிவுப் பொருட்கள் மூலம் மின்சாரம் தயாரித்து தெருவிளக்குகளை எரியவைக்கும் சோதனை கடந்த சனிக்கிழமை அன்று நடந்தது. அதின்படி காலனியில் உள்ள 240 இல்லங்களிலிருந்து சேகரிக்கப்படும் கழிவுகளை வைத்து மீத்தேன் எரிவாயு தயாரித்து, அதன் மூலம் ஜெனரேட்டர்களை இயக்கி மின்சாரம் தயாரிக்கப்பட்டது. இந்த மின்சார சக்தி அங்கிருந்த தெரு விளக்குகளை இயக்க பயன்படுத்தப்பட்டது. இந்த சோதனை திருப்திகரமாக இருந்ததாக சோதனை செய்தவர்கள் குறிப்பிட்டனர். மேலும் விவரங்களுக்கு: The Hindu: Tiruneermalai can now use biogas for streetlights

மாநகரங்களில் குப்பை, கழிவுநீர் போன்றவற்றை அகற்றுவது பெரும் சவாலாகவே உள்ளது. இந்த கழிவுகளை பயன்படுத்தி எரிபொருள் தயாரித்தால் ஒரே கல்லில் இரண்டு மாங்காய்! குறைந்த செலவில் எரிபொருளும் தயாரிக்கலாம், சுற்றுச் சூழல் மாசடைவதையும் தடுக்கலாம்.

சுற்றுச்சூழல் மாசடைவதற்கு வழிவகுக்கும் மற்றொரு முக்கிய காரணி பாலிதீன் பைகள். ஆம், துணிக்கடை முதல் காய்கறி கடை எங்கும் பொருட்களை வைத்து தர பயன்படும் அதே பாலிதின் பைகள் தான். மிகவும் சௌகர்யமான, எளிமையான பைகள் தான். ஆனால் பிரச்சனை என்னவென்றால் இந்த பாலிதின் பைகள் மக்காத தன்மை கொண்டவை. சரியான முறையில் அகற்றாமல், மறுசுழற்சி செய்யாமல் விட்டால் சுற்றுச்சூழல் பெருமளவு மாசடையும். சென்ற வருடம் மும்பையில் மழை பெய்து பெருவெள்ளம் வந்தது நினைவிருக்கலாம். மும்பை மக்கள் தூக்கியெறிந்த பாலிதீன் பைகள் மக்காமல் பெருகிப்போய் மும்பை நீர்நிலைகளை அடைத்துக் கொண்டதே வெள்ளத்திற்கு முக்கிய காரணம் (Global warming மற்றொரு முக்கிய காரணம்).

சரி, இந்த ப்ளாஸ்டிக் பைகளை வைத்துக்கொண்டு என்ன தான் செய்வது? ‘ரோடு போடலாம்’ என்று சொல்கிறார் மதுரை தியாகராய கல்லூரியின் டீன் ஆர். வாசுதேவன். ப்ளாஸ்டிக் குப்பைகளை உருக்கி தார் உடன் கலந்து போடப்படும் ரோடு மிகவும் உறுதியாக விளங்கும் என அவர் கூறுகிறார். ஒரு டன் ப்ளாஸ்டிக் குப்பையை பயன்படுத்தி ஒரு கிலோமீட்டர் ரோடு போடலாமாம்! மேலும் விவரங்களுக்கு: The Hindu: “Adoption of innovative technologies vital for nation’s development”

தொடர்பான இணைப்புகள்:

ஸ்வீடன் நாட்டில் மதுபானம் எரிபொருளாக மாற்றப்படுவது பற்றி முன்பு பதிந்திருந்தேன். அதையும் பார்க்கவும்.

Entry Filed under: எரிபொருள், சுற்றுச்சூழல். .

Leave a Comment

Required

Required, hidden

Some HTML allowed:
<a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <pre> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Trackback this post  |  Subscribe to the comments via RSS Feed


குறிச்சொற்கள்

Uncategorized அன்பு ஆன்மீகம் இயற்கை ஊனம் எரிபொருள் கடவுள் சாதனை சிந்தனைகள் சுயமுன்னேற்றம் சுற்றுச்சூழல் தியானம் நம்பிக்கை நாத்திகம் நித்யானந்தர் புலி பெண்கள் பொறுப்புணர்வு பௌத்தம் மதன் மதுபானம் மனசாட்சி மனம் மனிதநேயம் மனிதன் மருத்துவம் யோகம் விஞ்ஞானம் விவேகானந்தர் வீடியோ

RSS என் புதிய தளம்

RSS என் தலைமையகம்

பதிவுலகம்

Tamil resources

website metrics