ராத்திரி வானம் பார்க்கிற பழக்கம் உண்டா உங்களுக்கு?
ஜூலை 19, 2007
சின்ன வயசிலிருந்தே ராத்திரி படுக்க போறதுக்கு முன்னாடி என்னோட பொழுதுபோக்கு, மொட்டை மாடி குட்டிச்சுவர்ல படுத்துட்டு வானத்தில இருக்கிற நட்சத்திரங்களை வேடிக்கை பார்த்து ரசிக்கிறது. நான் குழந்தையா இருந்தப்பவே எங்க அம்மா எல்லா அம்மாக்களையும் போல் நிலாவை காட்டி தான் எனக்கு சோறு ஊட்டுவாங்களாம் (இப்ப இருக்கிற அம்மாக்களெல்லாம் மெகாசீரியல் காட்டி தான் சோறு ஊட்றது…
ஹும்). அப்புறம் ஸ்கூல் போற வயசானப்புறம் சாயங்காலம் ஹோம்வொர்க் எல்லாம் முடிச்சுட்டு மாடிக்கு போயிடுவேன். மாடியில அன்னார்ந்து படுத்து வானத்தை பார்த்து இயற்கையோட பிரம்மாண்டத்தை பார்த்து ரசிக்கும்போது நம்மோட வாழ்க்கை, தினசரி டென்ஷன் எல்லாம் ரொம்ப அற்பமா தோனும். ராத்திரி வானம் பார்க்கும் இந்த நல்ல பழக்கம் இப்ப காலேஜெல்லாம் முடிச்சு வேலை பார்க்கும்போது கூட தொடர்ந்துட்டே வருது.
உங்களுக்கும் வானம் பார்த்து நட்சத்திரம், நட்சத்திர மண்டலம் (constellation) எல்லாம் identify பண்ணும் பழக்கம் இருக்கலாம். அப்படி இல்லைன்னா (இருந்தாலும் கூட) இந்த வலைத்தளத்தை போய் பாருங்க. Orion, சப்தரிஷி மண்டலம், துருவ நட்சத்திரம், இந்த மாதிரி முக்கியமா வானத்தில இருக்கற விஷயங்களெல்லாம் எப்படி கண்டுபிடிக்கிறதுன்னு ரொம்ப அழகா கத்துக் கொடுக்கிறாங்க. கத்துக்கிட்டு இன்னைக்கு ராத்திரியே உங்க வீட்டு மொட்டை மாடிக்கு போய் துருவன், சப்தரிஷிகள், இவங்களோடெல்லாம் உறவாடிட்டு வந்து படுங்க. அடுத்த நாள் காலையில எழுந்திருக்கும்போது சும்மா, புதுசா பொறந்த மாதிரி இருக்கும்!
Learn: Identify constellations, stars, planets and how to navigate at night
பின்குறிப்பு: ராத்திரி நேரத்துல வேற முக்கியமான வேலைங்களுக்கெல்லாம் நேரம் ஒதுக்கி வச்சிருக்கும் வளர்ந்த மனிதர்கள் இந்த மாதிரி சின்னப்பசங்க விஷயத்தையெல்லாம் கண்டுக்கப்படாது
12 Comments Add your own
Leave a Comment
Some HTML allowed:
<a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <pre> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>
Trackback this post | Subscribe to the comments via RSS Feed
1.
வடுவூர் குமார் | ஜூலை 19, 2007 at 18:17
இப்பவும் நடக்கும் போது அப்படியே பார்த்துக்கொண்டு போகும் பழக்கம் உண்டு.
சுமார் 9 மணிக்கு தலைக்கு மேல் பார்த்தால் ஜூப்பிட்டர் அதன் நிலவுகள்.
மேற்கு பக்கத்தில் வீனஸ்.
விடியற்காலை கிழக்கில் மார்ஸ் தெரிகிறது.
2.
Friendly Fire | ஜூலை 20, 2007 at 15:12
வருகைக்கு நன்றி குமார். உங்களுக்கும் இந்த விஷயத்தில் ஆர்வம் இருப்பது குறித்து மகிழ்ச்சி!
3.
Xoak | ஜூலை 24, 2007 at 23:59
வானம் என்றால் என்ன ?
4.
Friendly Fire | ஜூலை 25, 2007 at 8:58
நீங்க பொறந்ததுலேயிருந்தே ஏதாவது ஜெயில்ல அடைஞ்சு கிடக்கிறீங்களா?
அப்படி நிஜமாவே வானம் என்கிற வார்த்தைக்கு அர்த்தம் தெரியலைன்னா இங்கே போய் பார்த்துக்கோங்க.
5.
Xoak | ஜூலை 25, 2007 at 21:51
ஜெயில் என்றால் என்ன ?
6.
Friendly Fire | ஜூலை 27, 2007 at 9:12
ஆஹா! உலகமே தெரியாத பச்சக்கொழந்த போலிருக்கு! உடனே “உலகம் என்றால் என்ன?” அப்படின்னு கேட்டு வைச்சுடபோவுது
. இந்தமாதிரி குழந்தைகளின் நச்சரிப்புக்கெல்லாம் பதில் சொல்ற பொறுமை நமக்கில்லைப்பா. விடு ஜூட்…
7.
Surya | ஆகஸ்ட் 12, 2007 at 13:52
அற்புதமான பதிவு.. பயனுள்ள தகவல்கள்.
ரொம்ப நல்லாயிருக்கு..
வாழ்த்துக்கள்..
சூர்யா
துபாய்.
butterflysurya@gmail.com
8.
Friendly Fire | ஆகஸ்ட் 12, 2007 at 14:45
நன்றி சூர்யா!
9.
Geetha Ramkumar | ஆகஸ்ட் 31, 2007 at 11:54
Very nice
10.
Friendly Fire | செப்டம்பர் 9, 2007 at 22:09
நன்றி கீதா ராம்குமார்!
11.
pushkarani | செப்டம்பர் 29, 2008 at 14:12
Enakkum kooda antha pazhakkam irukkirathu
Enakku migavum piditha manathukku amaithiyai tharum
pazhakkam ithu
12.
Friendly Fire | செப்டம்பர் 29, 2008 at 20:10
இயற்கையுடன் உறவாடும் இந்த அருமையான பழக்கம் உங்களுக்கும் உண்டு என்பதை அறிவதில் மிகவும் மகிழ்ச்சி புஷ்கரனி!