Posts filed under 'சுயமுன்னேற்றம்'

பரமஹம்ச நித்யானந்தரின் சொற்பொழிவு

நேற்றிரவு youtubeல் மேய்ந்து கொண்டிருந்த போது கீழுள்ள பரமஹம்ச நித்யானந்தரின் சொற்பொழிவை காண நேர்ந்தது. அவருக்கு சிறிய வயதில் ஏற்பட்ட ஆன்மீக அனுபவம் பற்றியும் நம் வாழ்க்கைக்கு சில உபயோகமான அறிவுரைகளையும் கூறுகிறார்.


(குறிப்பு: ஆங்கில சொற்பொழிவு. கொஞ்சம் நீளமான வீடியோ, 52 நிமிடங்கள்)

நித்யானந்தர் தமக்கு ஏற்பட்டதாக கூறும் ஆன்மீக அனுபவம் கேட்க சுவாரஸ்யமாய் உள்ளது. அப்போது அவரால் தன், முன், பின், இடது, வலது, மேலே, கீழே என அனைத்து பக்கங்களில் இருப்பதையும் 360˚ பார்வையில் காணமுடிந்ததாக கூறுகிறார், மேலும், தன்னைச் சுற்றியிருந்த அனைத்து பொருட்களிலும் தன்னையே உணர்ந்ததாகவும் கூறுகிறார்.

என்னுடைய முந்தைய பதிவில் இருபரிமாண, முப்பரிமாண, நாற்பரிமாண உலகங்கள் பற்றியும், பரமஹம்ச யோகானந்தர், மற்றும் வேறு சிலரின் ஆன்மீக அனுபவங்கள் எப்படி hypothetic நாற்பரிமாண பார்வையுடன் ஒத்துப் போகிறது என்பது பற்றியும் எழுதியிருந்தேன். யோகானந்தர் முதலான அந்த பட்டியலில் பரமஹம்ச நித்யானந்தரையும் சேர்த்துக் கொள்ளலாம்.

பின்வரும் அறிவுரைகளையும் நித்யானந்தர் வீடியோவில் கூறுகிறார்.

  1. வாழ்க்கையில் பல சமயங்களில் சரியான முடிவை எடுக்க முடியாமல் நாம் குழப்பம் அடைகிறோம். அப்படிப்பட்ட தருணங்களில் நம் ஆன்மீக குரு ஆதே சூழ்நிலையில் எப்படி செயல்படுவார் என சிந்திக்க வேண்டும். சிறிதும் யோசிக்காமல் நாமும் அதே போல் உடனுக்குடனே செயல்பட்டு அந்த சந்தர்ப்பத்தை எதிர்கொள்ள வேண்டும்.
  2. பல சந்தர்ப்பங்களில், சரியான செயல்பாடு எது என நமக்குத் தெரிந்திருந்தும், பழக்கம் காரணமாகவோ, அல்லது தன்னம்பிக்கை இல்லாத காரணத்தாலோ நாம் சரியாக செயல்படுவதில்லை. ஒவ்வொரு முறையும் நாம் இவ்வாறு சரியான செயல்பாடு தெரிந்திருந்தும் செயல்படாமல் இருக்கும் போது, கர்மவினைகளில் மேலும் மேலும் அகப்பட்டுக் கொள்கிறோம். குடிப்பழக்கம், போதை, போன்ற அடிமைத்தனங்களை இதற்கு உதாரணமாக கூறலாம். போதைப் பொருள் கேடானது என்று அதைப் பயன்படுத்தும் அனைவருக்குமே தெரிந்திருக்கிறது. ஆனாலும் ஏன் அவர்களால் அந்த பழக்கத்தை விட முடியவில்லை? சரியான செயல்பாடு தெரிந்திருந்தும் தவறாக செயல்பட்டால் நம்மை ஆண்டவனாலும் காப்பாற்ற முடியாது! ஒரு விஷயத்தில் சரியான செயல்பாட்டை தீர்மானித்து விட்டவுடன் மறு யோசனை கூடாது. உடனே செயல்பட்டு அந்த விஷயத்தை முடித்துவிட்டு மறுவேலை பார்க்க வேண்டும்.
  3. நம் குருவை மட்டுமே நாம் எல்லா சந்தர்ப்பங்களிலும் பின்பற்ற வேண்டும். மற்ற மனிதர்கள் சமயங்களில் நமக்கு உதவலாம். ஆனால் அப்படிப்பட்ட சாதாரண மனிதர்களை நாம் எப்பொழுதும் பின்பற்றக் கூடாது. சாதாரண மனிதர்கள் நமக்கு சரியான அறிவுரைகள் வழங்கும்போது, அது அவர்களுடை அறிவுரை அல்ல, அவர்கள் மூலமாக நம் குருவே அறிவுறுத்துகிறார் என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

பரமஹம்ச நித்யானந்தர் யார், அவர் செயல்பாடுகள் என்ன என்பதெல்லாம் எனக்கு அவ்வளவாக தெரியாது. அவருடைய கட்டுரைகளை முன்பு குமுதத்தில் படித்திருக்கிறேன் (இப்போதெல்லாம் படிப்பதில்லை. கடைசியாக குமுதம் படித்து ஒரு வருடத்துக்கு மேல் ஆகிறது). அவர் கூறிய அறிவுரைகளும் புதிதல்ல, நமக்கே தோன்றுபவையும் பல இடங்களிலும் ஏற்கனவே கேட்டவையும் தான். ஆனால் என் வாழ்க்கையில் சில முடிவுகளை எடுக்க யோசித்துக் கொண்டிருக்கும் இந்த தருணத்தில் நித்யானந்தரின் அறிவுரைகளை கேட்டவுடன் மனத்தெளிவு ஏற்பட்டது. “சச்சிதானந்தம் மட்டுமே அனைவருக்கும் குரு” என்று கூறியுள்ளார் ராமகிருஷ்ண பரமஹம்சர். மேலே குறிப்பிட்ட நித்யானந்திரின் மூன்றாவது அறிவுரைப்படியும் அந்த பரம்பொருளாகிய குருவே நித்யானந்தரின் மூலம் எனக்கு இத்தருணத்தில் அறிவுறுத்தியதாக நான் எடுத்துக்கொள்கிறேன். இன்றைய பதிவு மூலம் எவராவது பயனடைந்திருப்பாரானால், சச்சிதானந்தமே இப்பதிவு மூலமாக அவருக்கும் அறிவுறுத்தியதாக எடுத்துக்கொள்வாராக.


2 comments ஜூலை 7, 2007

மனோ சக்தி, காந்த சக்தி

ஊரே ரஜினி’காந்த்’ பற்றி பேசிக்கொண்டிருக்கும்போது நாமும் ‘காந்த’ சக்தி கான்செப்டை வைத்து ஒரு பதிவு போட்டுவிடலாமே என்று நினைத்ததன் விளைவு, நீங்கள் கீழே காண்பது.

ரஜினிகாந்த் பற்றி இன்று பேசுபவர்கள் பல வகை. அவருடைய காந்த சக்தியால் கவர்ந்திழுக்கப்பட்டு சிலாகித்துக் கொண்டிருப்பவர்கள் சிலர். சிலர் அவரைப் பார்த்து பொறாமைப்படுகிறார்கள், இன்னும் சிலரோ, “அவரிடம் காந்த சக்தியும் இல்லை ஒரு மன்னும் இல்லை, ஏற்கனவே முட்டாளா இருக்கிறவனை மேலும் முட்டாளாக்கி காசு பார்க்கிறார்”, என்கிறார்கள். எது எப்படியிருந்தாலும் சரி, ஒரு விஷயத்தை எல்லோரும் ஒத்துக்கொள்ளத்தான் வேண்டும். ரஜினி எதை அடையவேண்டும் என்று நினைத்தாரோ, அது பணமோ, புகழோ, ரசிகர்களின் ஆதரவோ, அதை அடைந்து வெற்றிகண்ட மனிதர்.

அது போலவே நாமும் நமக்குத் தேவையானதையெல்லாம் அடைய முடியுமா? ரஜினி அவர் துறையில் வெற்றி அடைந்தது போல் நாமும் நம் துறையில் வெற்றி அடைந்து சூப்பர் ஸ்டார் ஆக முடியுமா? கண்டிப்பாக முடியும். ஒரு காந்தம் எப்படி இரும்புத் துண்டுகளை தன்னிடம் கவர்ந்திழுக்கிறதோ, அது போலவே நாமும் நம் மனதை சக்திவாய்ந்த காந்தம் போலாக்கி நமக்கு தேவையானதையெல்லாம் கவர்ந்திழுத்து நமதாக்கிக்கொள்ளலாம்.

காந்தம் எப்படி இரும்புத் துண்டுகளை இழுக்கிறது? ஒரு சாதாரண இரும்புத்துண்டை சக்தி வாய்ந்த காந்தமாக்குவது எது? ஒரு இரும்புத்துண்டு கோடிக்கணக்கான அனு போன்ற சின்ன சின்ன பகுதிகளால் ஆனது. இந்த பகுதிகள் ஒவ்வொன்றுக்கும் வடதுருவம் தென்துருவம் உண்டு. இரும்புத்துண்டில் உள்ள இந்த அனு போன்ற பகுதிகளுடைய வடதுருவங்கள் வெவ்வேறு திசைகளை பார்த்துக்கொண்டிப்பதால் அது காந்த சக்தி இல்லாத சாதாரண இரும்புத்துண்டாகவே விளங்குகிறது. இந்த கோடிக்கணக்கான சின்ன சின்ன பகுதிகள் எல்லாவற்றின் வடதுருவங்களையும் எப்படியாவது ஒரே திசையை பார்க்கும்படி செய்தோமென்றால் அது ஒரு சக்திவாய்ந்த காந்தமாக மாறி மற்ற இரும்புத் துண்டுகளையெல்லாம் தன்னிடம் இழுத்துக்கொள்கிறது.

அதேமாதிரிதாங்க, நம்மை மாதிரி சாதாரண மனிதர்களின் மனதில் உள்ள வெவ்வேறு எண்ண அலைகள் ஒன்றோடொன்று சம்பந்தமேயில்லாமல் வெவ்வேறு விஷயங்களை நோக்கி போய்க் கொண்டிருக்கிறது. நம் மனதில் தோன்றும் எண்ணங்களையெல்லாம் ஒரே திசையில் நம் இலட்சியத்தை நோக்கி செலுத்தினோமென்றால், இரும்புத்துண்டுகள் காந்தத்தால் இழுக்கப்படுகிற மாதிரி நமக்கு வேண்டியவை எல்லாம் நம்மை நோக்கி இழுக்கப்படும். (more…)


5 comments ஜூன் 21, 2007

Previous Posts


குறிச்சொற்கள்

அன்பு ஆன்மீகம் இயற்கை ஊனம் எரிபொருள் கடவுள் சாதனை சிந்தனைகள் சுயமுன்னேற்றம் சுற்றுச்சூழல் தியானம் நம்பிக்கை நாத்திகம் நித்யானந்தர் புலி பெண்கள் பொறுப்புணர்வு பௌத்தம் மதன் மதுபானம் மனசாட்சி மனம் மனிதநேயம் மனிதன் மருத்துவம் யோகம் விஞ்ஞானம் விவேகானந்தர் வீடியோ Uncategorized

RSS என் புதிய தளம்

RSS என் தலைமையகம்

பதிவுலகம்

Tamil resources

website metrics