Posts filed under 'நம்பிக்கை'
மூளைவளர்ச்சி குன்றிய மாமேதை!
அரிது அரிது மானிடராய் பிறத்தல் அரிது
அதிலும் கூன் குருடு செவிடு பேடு நீங்கிப் பிறத்தல் அரிது
என்று பாடினார் ஔவையார்.
சிதம்பரத்தைச் சேர்ந்த லலித்குமார் பிறவியிலேயே ஊனமுற்றவர், பார்வையற்றவர், கேட்கும் திறன் இல்லாதவர், மூளை வளர்ச்சி குன்றியவர். இன்று பதினெட்டு வயதாகும் இவர் திருக்குறள், தேவராம், திருவாசகம் எல்லாம் மனப்பாடம் செய்து சொல்கிறார், யோகாசனம் பழகி முன்னூற்றம்பது ஆசனங்களுக்கு மேல் செய்து காட்டுகிறார், குடியரசுத் தலைவர் கையால் பரிசு வாங்கியிருக்கிறார். அதிசயமாக இருக்கிறதல்லவா? இவரைப் பற்றியும், இவரை பொறுமையுடனும், நம்பிக்கையுடனும் வளர்த்து ஆளாக்கிய இவரது பெற்றோரைப் பற்றியும் இந்த மாத மங்கையர் மலரில் “யாதுமாகி நின்றாள்” என்ற பெயரில் நம்பிக்கையூட்டும் கட்டுரை ஒன்று வந்துள்ளது. லலித்குமாரை வளர்த்து சாதனையாளனாக ஆக்க அவரது பெற்றோர்கள் மேற்கொண்ட முயற்சிகள், புரிந்த தியாகங்கள் தான் என்னென்ன! இந்த கட்டுரையைப் படித்தபோது எனக்கு ஹெலன் கெல்லர், ஆனி சுலைவன் ஆகியோரின் நினைவு தான் வந்தது. லலித்குமார் மென்மேலும் சாதனைகள் படைத்து நம்பிக்கை நட்சத்திரமாக மிளிர என் வாழ்த்துக்கள்.
இந்த கட்டுரையை இதுவரை படிக்காதவர்களுக்காகவும், ‘மங்கையர்’ மலரை கையில் எடுப்பதை பெரிய கௌரவக்குறைச்சலாக கருதும் தன்மான ஆண் சிங்கங்களுக்காகவும், TSCII காரணத்தால் மங்கையர் மலர் வலைத்தளத்தில் இக்கட்டுரையை படிக்க இயலாதவர்களின் வசதிக்காகவும் (மேலும்…)
3 comments ஜூலை 9, 2007