Posts filed under 'மருத்துவம்'

மருத்துவருள் மாணிக்கம்

Pradyut Kumarதன்னிடம் வந்த நோயாளியை மரணத்தின் விளிம்பிலிருந்து மீட்டுக் கொண்டு வந்தவரல்ல இவர். ஏழை நோயாளிகளுக்கு இலவசமாக மருத்துவம் செய்பவரா இவர்? அதுவும் அல்ல. பிறகு என்ன தான் செய்தார் இவர்? இவரிடம் அபார்ஷன் சிகிச்சைக்கென வந்த ஒரு பெண், இவரது கவனக் குறைவால் உயிரையே இழந்தார். ஆனால் அதற்குப் பிறகு இந்த மருத்துவர் நடந்துகொண்ட விதம் தான் இவரை ‘மருத்துவருள் மாணிக்கம்’ என்று அழைக்க வைக்கிறது. தன்னை நம்பி வந்த பெண்மணி இறந்தவுடன் உடனே அருகில் இருந்த காவல் நிலையத்துக்குச் சென்று தன் மேல் தானே குற்றம் சுமத்திக் கொண்டு சரணடைந்தார் இந்த மருத்துவர்! தன் மனசாட்சி உறுத்தியதால் இவ்வாறு சரணடைந்ததாக கூறுகிறார். இவர் பெயர் ப்ரத்யுத் குமார் நஸ்கார். மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்தவர். மேலும் விவரங்களுக்கு பார்க்க: CNN-IBN: Doc lodges FIR againt himself

தன்னிடம் வரும் நோயாளியை சோதனை எலியாக பயன்படுத்தி தன் மகனை சாதனையாளனாக ஆக்க முயலும் மருத்துவர்கள் மத்தியில் இப்படியும் ஒரு மனசாட்சி உள்ள மருத்துவர்!


Add comment ஜூன் 28, 2007


குறிச்சொற்கள்

அன்பு ஆன்மீகம் இயற்கை ஊனம் எரிபொருள் கடவுள் சாதனை சிந்தனைகள் சுயமுன்னேற்றம் சுற்றுச்சூழல் தியானம் நம்பிக்கை நாத்திகம் நித்யானந்தர் புலி பெண்கள் பொறுப்புணர்வு பௌத்தம் மதன் மதுபானம் மனசாட்சி மனம் மனிதநேயம் மனிதன் மருத்துவம் யோகம் விஞ்ஞானம் விவேகானந்தர் வீடியோ Uncategorized

RSS என் புதிய தளம்

RSS என் தலைமையகம்

பதிவுலகம்

Tamil resources

website metrics