சின்ன வயசிலிருந்தே ராத்திரி படுக்க போறதுக்கு முன்னாடி என்னோட பொழுதுபோக்கு, மொட்டை மாடி குட்டிச்சுவர்ல படுத்துட்டு வானத்தில இருக்கிற நட்சத்திரங்களை வேடிக்கை பார்த்து ரசிக்கிறது. நான் குழந்தையா இருந்தப்பவே எங்க அம்மா எல்லா அம்மாக்களையும் போல் நிலாவை காட்டி தான் எனக்கு சோறு ஊட்டுவாங்களாம் (இப்ப இருக்கிற அம்மாக்களெல்லாம் மெகாசீரியல் காட்டி தான் சோறு ஊட்றது… ஹும்). அப்புறம் ஸ்கூல் போற வயசானப்புறம் சாயங்காலம் ஹோம்வொர்க் எல்லாம் முடிச்சுட்டு மாடிக்கு போயிடுவேன். மாடியில அன்னார்ந்து படுத்து வானத்தை பார்த்து இயற்கையோட பிரம்மாண்டத்தை பார்த்து ரசிக்கும்போது நம்மோட வாழ்க்கை, தினசரி டென்ஷன் எல்லாம் ரொம்ப அற்பமா தோனும். ராத்திரி வானம் பார்க்கும் இந்த நல்ல பழக்கம் இப்ப காலேஜெல்லாம் முடிச்சு வேலை பார்க்கும்போது கூட தொடர்ந்துட்டே வருது.
உங்களுக்கும் வானம் பார்த்து நட்சத்திரம், நட்சத்திர மண்டலம் (constellation) எல்லாம் identify பண்ணும் பழக்கம் இருக்கலாம். அப்படி இல்லைன்னா (இருந்தாலும் கூட) இந்த வலைத்தளத்தை போய் பாருங்க. Orion, சப்தரிஷி மண்டலம், துருவ நட்சத்திரம், இந்த மாதிரி முக்கியமா வானத்தில இருக்கற விஷயங்களெல்லாம் எப்படி கண்டுபிடிக்கிறதுன்னு ரொம்ப அழகா கத்துக் கொடுக்கிறாங்க. கத்துக்கிட்டு இன்னைக்கு ராத்திரியே உங்க வீட்டு மொட்டை மாடிக்கு போய் துருவன், சப்தரிஷிகள், இவங்களோடெல்லாம் உறவாடிட்டு வந்து படுங்க. அடுத்த நாள் காலையில எழுந்திருக்கும்போது சும்மா, புதுசா பொறந்த மாதிரி இருக்கும்!
பின்குறிப்பு: ராத்திரி நேரத்துல வேற முக்கியமான வேலைங்களுக்கெல்லாம் நேரம் ஒதுக்கி வச்சிருக்கும் வளர்ந்த மனிதர்கள் இந்த மாதிரி சின்னப்பசங்க விஷயத்தையெல்லாம் கண்டுக்கப்படாது
உலகம் தட்டை என்று ஆதி காலத்து மனிதர்களெல்லாம் நினைத்துக் கொண்டிருந்தார்களாமே. நானும் சிறியவனாக இருந்த போது அப்படித்தான் புரிந்து கொண்டிருந்தேன். பின்னர் பள்ளி சென்று விஞ்ஞானப் பாடம் எல்லாம் படித்த பிறகு தான் உலகம் உருண்டை என்று தெளிந்தது. ஆனால் நான் இங்கே கூறுவது நாம் வாழும் தட்டை/உருண்டை உலகம் பற்றியதல்ல, இது தட்டையான 2D உலகம் பற்றியது. வீடியோவைப் பாருங்கள். அதில் வெள்ளை தாடி வைத்த சூப்பர் தாத்தா ஒருவர் இந்த 2D தட்டை உலகம் பற்றியும் அதில் வசிக்கக் கூடியவர்கள் பற்றியும் அருமையாக விளக்குகிறார்.
மனிதர்களாகிய நாம் பார்ப்பது, உணர்வது, வாழ்வது எல்லாம் நீளம், அகலம், உயரம் என்ற மூன்று பரிணாமங்களைக் கொண்ட 3D உலகத்தில் தான். உதாரணமாக உங்கள் வீட்டின் ஒரு அறையை எடுத்துக் கொண்டால் அதற்கு நீளம், அகலம், உயரம் என்ற மூன்று பரிணாமங்கள் உண்டு. ஆனால் அறையின் தரையை எடுத்துக் கொண்டால் அதற்கு நீளம், அகலம் என்ற இரு பரிணாமங்களே. தரைக்கு உயரம் கிடையாது. அதே போல் உருண்டையான ஒரு பந்து 3D, ஆனால், காகிதத்தில் ஒரு வட்டம் போட்டீர்களானால் அது 2D.
மேலே கண்ட வீடியோவில் உள்ள பிழை ஒன்றை கவனித்தீர்களா? வீடியோவில் வரும் இருபரிமாண உலகம் உண்மையில் முப்பரிமான உலகமே. அது நீள அகலத்துடன், குறுகிய உயரமும் கொண்டது. உண்மையில் முப்பரிமாண உலகத்தைத் தவிர மனிதர்களாகிய நம்மால் வேறு எதையும் சிந்திக்க முடியாது. ஒரு பேப்பரை எடுத்துக் கொண்டால் கூட அதற்கும் மிகச்சிறிய அடர்த்தி உண்டு. இதனால் இரு பரிமாண உலகம் சாத்தியமில்லை என்று கூறிவிட முடியாது. மாறாக, நாம் இதுவரை கண்டிராத 2D உலகம் எங்கும் உள்ளது, அதே போல் நமக்கு மேலான 4D உலகமும் சாத்தியமே! யார் கண்டது, வீடியோவில் முப்பரிமாண தாடி தாத்தா இருபரிணாம வட்ட நங்கையை அவள் அறியாமேலே காண்பது போல நமக்கு ‘மேலே’ ஒரு 4D மனிதர் இருந்து கொண்டு நாம் செய்பவற்றையெல்லாம் கண்காணிக்கிறாரோ என்னவோ . இரண்டு, மூன்று, நான்கு அல்ல, நவீன விஞ்ஞான தத்துவமான string theory பதினோரு பரிணாமங்கள் இந்த பிரபஞ்சத்தில் உள்ளது, அதற்கு மேலும் இருக்க வாய்ப்புள்ளது என்றே கூறுகிறது!
இரு பரிமாண 2D தட்டை உலகில் நீங்கள் வாழ்ந்தீர்களானால் அனைத்தையும் கோடுகளாகத் தான் பார்ப்பீர்கள். 2D உலகில் நீங்கள் வாழும் planeஇல் உள்ள கோடுகள் தவிர உங்களுக்கு வேறு ஒன்றும் தெரியாது. நான்கு கோடுகளால் சூழப்பட்ட சதுரம் ஒன்றை காகிதத்தில் வரைந்தீர்களானால் அதை 2D தட்டை உலக வாசிகளால் அப்படியே பார்க்க முடியாது. ஒரு நேரத்தில் ஒரு பக்கத்தை மட்டும் ஒரு கோடாக அவர்களால் பார்க்க முடியும். ஒரு கோணத்திலிருந்து பார்த்தால் அதிகபட்சமாக சதுரத்தின் இரண்டு பக்கங்களை தான் 2D மக்களால் பார்க்க முடியும். ஆனால் 3D மக்களாகிய நாம் அந்த சதுரத்தின் நான்கு பக்கங்களையும் சதுரத்தின் உள்ளே உள்ளதையும் முழுவதாக பார்க்கிறோம்.
அது போல் மேலுள்ள படத்தில் உள்ளது போன்ற ஆறு பக்கங்களால் ஆன 3D தாயக்கட்டை ஒன்றை எடுத்துக் கொண்டால் நம்மால் அதன் ஒரு பக்கத்தை மட்டுமே பார்க்க முடியும். ஒரு கோணத்திலிருந்து பார்த்தால் அதிகபட்சமாக ஒரு நேரத்தில் மூன்று பக்கங்களை (படத்தில் உள்ளது போல்) பார்க்க முடியும். இந்த 2D, 3D வாதத்தை அப்படியே நீட்டிக் கொண்டு போனால், 4D மக்களால் அந்த தாயக்கட்டைகளின் ஆறு பக்கங்களையும் ஒரே நேரத்தில் பார்க்க முடியும். அதெப்படி? நினைத்துப் பார்க்கக் கூட கடினமாக உள்ளது இல்லையா? ம்… பரமஹம்ச யோகானந்தரின் சுயசரிதையான Autobiography of a Yogi இன் ஒன்பதாம் அத்தியாயத்தில் அவருக்கு ஏற்பட்ட ஒரு அனுபவத்தைப் பற்றி யோகானந்தர் குறிப்பிடுகிறார்.
A transforming silence ensued. Just as the modern “talkies” become inaudible motion pictures when the sound apparatus goes out of order, so the Divine Hand, by some strange miracle, stifled the earthly bustle. The pedestrians as well as the passing trolley cars, automobiles, bullock carts, and iron-wheeled hackney carriages were all in noiseless transit. As though possessing an omnipresent eye, I beheld the scenes which were behind me, and to each side, as easily as those in front. The whole spectacle of activity in that small section of Calcutta passed before me without a sound. Like a glow of fire dimly seen beneath a thin coat of ashes, a mellow luminescence permeated the panoramic view.
My own body seemed nothing more than one of the many shadows, though it was motionless, while the others flitted mutely to and fro. Several boys, friends of mine, approached and passed on; though they had looked directly at me, it was without recognition.
The unique pantomime brought me an inexpressible ecstasy. I drank deep from some blissful fount….
யோகானந்தர் கூறுவதெல்லாம் உண்மையா பொய்யா என்ற விவாதத்திற்கு எல்லாம் நான் வரவில்லை. ஆனால், சுற்றியுள்ள அனைத்தையும் ஒரே நேரத்தில் பார்க்கக் கூடிய 4D பார்வைக்கும், அவரது இந்த ஆன்மீக அனுபவத்திற்கும் இருக்கும் ஒற்றுமையைப் பாருங்கள். பலர் தங்களது ஆன்மீக அனுபவத்தை விவரிக்கும்போது இது போலவே விவரிப்பதை நான் கவனித்துள்ளேன். இங்கு தான் விஞ்ஞானமும் ஆன்மீகமும் கை கோர்க்கிறதோ! ஆனால் ஒன்று, இதெல்லாம் சந்தேகத்திற்கு உட்பட்டதே. எனக்கே சொந்தமாக எந்த ஆன்மீக அனுபவமாவது ஏற்படும் வரை இதைப் பற்றி என்னால் அதிகாரப் பூர்வமாக ஏதுவும் கூற முடியாது.
இந்த தட்டை உலகம், கோடு உலகம், புள்ளி உலகம் போன்ற தத்தவங்களை வைத்து Edwin Abbott Abbott என்பவர் Flatland என்ற ஒரு சிறிய நாவலையே எழுதியிருக்கிறார். நேரம் இருந்தால் படித்துப் பாருங்கள். பள்ளி செல்லக் கூடிய மகனோ மகளோ உங்களுக்கு இருந்தால் கண்டிப்பாக படிக்கச் சொல்லுங்கள். சிந்தனையைத் தூண்டும் புத்தகம் அது. Flatland புத்தகத்தின் இணைப்பு.
ஒரு விஷயத்தை எந்த சந்தேகமும் இன்றி உண்மை என உணரும் வரை அதை நம்மால் ஒப்புக்கொள்ள முடியாது, ஒப்புக் கொள்ளவும் கூடாது. அதே நேரத்தில் மனித மூளைக்கும் அறிவுக்கும் எட்டாத பல விஷயங்கள் இயற்கையில் உண்டு என்பதை நாம் ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும். இயற்கை எவ்வளவு விந்தையானது! நாம் காணாதவை, கற்பனை கூட செய்ய முடியாதவை இயற்கையில் என்னென்னவெல்லாம் உண்டோ? கற்றது கைமண் அளவு, கல்லாதது கடலளவு!
விஞ்ஞான மேதை அல்பர்ட் ஐன்ஸ்டின் சொன்னார்,
“Nature shows us only the tail of the lion. But I do not doubt that the lion belongs to it even though he cannot at once reveal himself because of his enormous size.”