நச்னு ஒரு பதில்
ஆனந்த விகடன் ஹாய் மதன் பகுதியில் மதனின் பதில்கள் முக்கால்வாசி நீளமான சரித்திர லெக்சர்களாவே இருக்கும். இந்த வாரம் ஒரு கேள்விக்கு அவர் சொன்ன அபூர்வமான நச் பதில் என் நெஞ்சில பச்சக்னு ஒட்டிக்கிச்சு.
கேள்வி: ஆவதும் பெண்ணாலே… சரி! அழிவதும் பெண்ணாலே, எப்படி?
பதில்: மற்றவர் மீது பழி போடுகிற புத்தியில் விளைந்த அபத்தமான கருத்து அது. முதல் வேலையாக, ‘பெண்ணாலே’ என்பதை ‘நம்மாலே’ என்று மாற்ற வேண்டும்.
ஆவதும் பெண்ணாலே, அழிவதும் பெண்ணாலே, அவனாலே, இவனாலேன்னு எல்லாத்துக்கும் அடுத்தவர் மேல பழி போடாம, நம்மோட வெற்றி தோல்விக்கு நாமே பொறுப்பெடுத்துகிட்டா நம்மோட ஆற்றல் பன்மடங்கு உயரும்கிறது சத்தியம். ஸ்பைடர்மேன் திரைப்படத்தில் எனக்கு பிடித்த ஒரு டயலாக் “With great power comes great responsibility”. “ஆற்றல் அதிகரிக்கும்போது பொறுப்புகளும் கூடுகிறது”, அப்படின்னு மொழிபெயர்க்கலாம். இதை கொஞ்சம் உல்டா பன்னி இப்படியும் சொல்லலாம், “நம் பொறுப்புணர்வு அதிகரிக்கும்போது கூடவே நம் ஆற்றல்களும் வளர்கிறது.”
பொறுப்புணர்வு பத்தி பேசும்போது விவேகானந்தர் சொன்ன இந்த வார்த்தைகள் ஞாபகத்துக்கு வருது.
‘நான் அனுபவித்துக் கொண்டிருக்கும் இந்தத் துன்பம், என்னுடைய சொந்தச் செயல்களாலேயே உருவாக்கப்பட்டிருக்கிறது. இந்த ஒரு நிலையே, என் ஒருவனால் மட்டுமே அது நீக்கப்பட வேண்டும் என்பதைக் காட்டுகிறது’ என்று சொல். நான் எதைப் படைத்தேனோ அதை என்னால் அழிக்கவும் முடியும். பிறரால் படைக்கப்பட்ட ஒன்றை ஒருபோதும் என்னால் அழிக்க முடியாது. எனவே, எழுந்து நில். தைரியமாக இரு. வலிமையுடன் இரு. பொறுப்பு முழுவதும் உன் தோள் மீதே சுமந்துகொள். உனது விதியைப் படைப்பவன் நீயே என்பதைப் புரிந்துகொள். உனக்குத் தேவையான எல்லா வலிமையும் உதவியும் உனக்குள்ளேயே குடிகொண்டிருக்கின்றன.
ஆமாம். ஆவதும் நம்மாலே, அழிவதும் நம்மாலே.
7 comments ஜூன் 17, 2007