Friendly Fire

இடமாற்றம்
Friendly Fire ஆகிய எனது தீப்பதிவுகள் இனி srinig.wordpress.com என்ற முகவரியில் இடம்பெறும். இங்கே என் கிறுக்கல்களை பொறுத்துக்கொண்டு ஊக்கமளித்த நண்பர்கள் யாவரும் அங்கும் வந்து ஆதரவளிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். நன்றி.

இன்னா செய்தாரை ஒறுத்தல்…
இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர்நாண

நன்னயஞ் செய்து விடல்.

(திருக்குறள்: 314)

சில நாட்களுக்கு முன்பு  ஒரு வலைப்பக்கத்தில் ஆப்பிரிக்க பழங்குடியனம் ஒன்றில் புழங்கும் ஒரு வித்தியாசமான சடங்கைப் பற்றிப் படித்தேன். அவர்கள் சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் குற்றம் ஏதாவது செய்து விட்டால் அவருக்கு தண்டனை வழங்கும் சடங்கு தான் இது. பழங்குடியினம் என்றவுடன் சினிமாவில் காட்டுவது போல் ஒரு பெரிய சட்டியை அடுப்பில் வைத்து, குற்றம் செய்தவனை அந்தச் சட்டியில் போட்டு சுட்டு மற்றவர் அனைவரும் இலைதழைகளை இடுப்பில் கட்டிக்கொண்டு சட்டியைச் சுற்றிச் சுற்றி வந்து ஆடுவார்கள் என்பது போல் கற்பனை செய்ய வேண்டாம். இந்த ஆப்பிரிக்க பழங்குடியின மக்கள் குற்றம் செய்தவரை கிராமத்தின் நடுவில் கொண்டு வந்து நிறுத்திவிடுவார்கள். கிராம மக்கள் அனைவரும் தத்தம் பணிகளை விட்டுவிட்டு குற்றம் செய்தவரைச் சுற்றி நின்று கொள்வார்கள். பின்னர் ஒருவர் பின் ஒருவராக குற்றம் செய்தவரிடம் சென்று குற்றம் செய்தவர் முற்காலத்தில் தமக்குச் செய்த நல்ல காரியங்களை அவருக்கு நினைவு படுத்துவார்கள். இந்த சடங்கு சில நாட்களுக்கு நடக்கும். சடங்கு முடிந்த பின்னர் குற்றவாளியை மறுபடியும் சமூகத்தினுள் மகிழ்ச்சியுடன் சேர்த்துக்கொள்வார்கள்.

இந்தப் பழங்குடியினரிடமிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டியது எவ்வளவு உள்ளது. இவர்களிடம் ஒரு விஷயத்தை கவனிக்க வேண்டும். இங்கே குற்றம் செய்தவரை பாதிப்பு ஏற்படுத்தியவராக பார்க்காமல் பாதிக்கப்பட்டவராக பார்க்கிறார்கள். குற்றம் செய்தவர் சகஜ நிலைக்குத் திரும்பும் வரை அவர் செய்த நல்ல காரியங்களை அவருக்கே நினைவுபடுத்துகிறார்கள்.

நாம் அனைவரும் தினந்தோறும் சின்னதாகவோ, பெரியதாகவோ ஏதாவது குற்றங்கள் செய்துகொண்டு தான் இருக்கிறோம். நாம் குற்றமோ தவறோ செய்வதற்கான காரணம் குற்றம் புரிவதனால் கிடைக்கும் நன்மையினால் அல்ல. உண்மையில் நாம் குற்றம் புரிய காரணம் நம்முள் உள்ள ஏதோவொரு வெறுமையினால் தான். நல்ல மனநிலையில் இருக்கும் ஒருவரும் குற்றம் செய்வதில்லை. சமூகத்தில் உள்ள நாம் அனைவரும் ஒருவரையொருவர் தொடர்ந்து நம் செயல்கள் மூலமும் எண்ணங்கள் மூலமும் பாதித்துக்கொண்டு தான் இருக்கிறோம். ஒரு குற்றம் நடக்கும்போது, அதற்கு ஒரு தனி மனிதனை குற்றம் சாட்டுவது சரியல்ல. சமூகத்தில் உள்ள அனைவரின் மனதிலும் உள்ள வெறுப்புணர்ச்சி ஒருசில துரதிர்ஷ்டசாலிகள் மூலம் குற்றங்களாகவும் தீவிரவாதச் செயல்களாகவும் வெளிப்படுகிறது. இதற்கு குற்றவாளியை மட்டும் உலகத்திலிருந்து நீக்கிவிட்டால் உலகிலிருந்து குற்றம் போய்விடுமா? இந்த துரதிர்ஷ்டசாலிகளால் மேலும் பலருக்கு ஆபத்து ஏற்படு வாய்ப்பிருக்கிறது என்றால் அவரை தனியான ஒரு இடத்திற்கு அழைத்துச் செல்லுங்கள், அவருக்கு என்ன பிரச்சனை என்று விசாரித்து அவருள் இருக்கும் வெறுப்புணர்ச்சியை போக்க ஏதாவது வழி செய்யுங்கள். ஆனால் என்னைப் பொறுத்தவரை சமூகத்தில் உள்ள நாம் அனைவருமே நமக்குள் சிறிதளவிலோ, பெரிதளவிலோ இருக்கும் வெறுப்புணர்ச்சியை களைந்துகொள்ளும் வரை எத்தனைபேரை தூக்கில் தொங்க விட்டாலும் சமூகத்தில் குற்றம் குறையாது.

இந்த விஷயத்தில் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர், சத்குரு ஜக்கி வாசுதேவ் போன்றோர் செய்யும் பணிகள் மகத்தானது. இவர்கள் தங்கள் யோக முறைகளை சிறைவாசிகளுக்கு கற்பித்து அவர்களை புது மனிதர்களாக்குகிறார்கள். இவர்கள் சொல்லிக்கொடுப்பது போன்ற யோக முறை ஒன்றை நானும் கடந்த சில வருடங்களாக பழகி வருகிறேன். யோகம் செய்வது மூலம் நமக்குள் உள்ள வெறுப்புணர்ச்சிகள் நீங்கி ஆனந்தமும் எல்லா உயிர்கள் மீது அன்பும் தோன்றும் என்பது உண்மை. சமூகத்தில் அன்பு தோன்றினால் குற்றங்களுக்கு இடம் ஏது? அன்பினால் காட்டு விலங்கான புலிகளையே கட்டுப்படுத்த முடியும்போது சமூக விலங்கான மனிதர்கள் எம்மாத்திரம்?

அன்பு மலரட்டும். அமைதி நிலவட்டும்.

ராத்திரி வானம் பார்க்கிற பழக்கம் உண்டா உங்களுக்கு?
சின்ன வயசிலிருந்தே ராத்திரி படுக்க போறதுக்கு முன்னாடி என்னோட பொழுதுபோக்கு, மொட்டை மாடி குட்டிச்சுவர்ல படுத்துட்டு வானத்தில இருக்கிற நட்சத்திரங்களை வேடிக்கை பார்த்து ரசிக்கிறது. நான் குழந்தையா இருந்தப்பவே எங்க அம்மா எல்லா அம்மாக்களையும் போல் நிலாவை காட்டி தான் எனக்கு சோறு ஊட்டுவாங்களாம் (இப்ப இருக்கிற அம்மாக்களெல்லாம் மெகாசீரியல் காட்டி தான் சோறு ஊட்றது…  ஹும்). அப்புறம் ஸ்கூல் போற வயசானப்புறம் சாயங்காலம் ஹோம்வொர்க் எல்லாம் முடிச்சுட்டு மாடிக்கு போயிடுவேன். மாடியில அன்னார்ந்து படுத்து வானத்தை பார்த்து இயற்கையோட பிரம்மாண்டத்தை பார்த்து ரசிக்கும்போது நம்மோட வாழ்க்கை, தினசரி டென்ஷன் எல்லாம் ரொம்ப அற்பமா தோனும். ராத்திரி வானம் பார்க்கும் இந்த நல்ல பழக்கம் இப்ப காலேஜெல்லாம் முடிச்சு வேலை பார்க்கும்போது கூட தொடர்ந்துட்டே வருது.

உங்களுக்கும் வானம் பார்த்து நட்சத்திரம், நட்சத்திர மண்டலம் (constellation) எல்லாம் identify பண்ணும் பழக்கம் இருக்கலாம். அப்படி இல்லைன்னா (இருந்தாலும் கூட) இந்த வலைத்தளத்தை போய் பாருங்க. Orion, சப்தரிஷி மண்டலம், துருவ நட்சத்திரம், இந்த மாதிரி முக்கியமா வானத்தில இருக்கற விஷயங்களெல்லாம் எப்படி கண்டுபிடிக்கிறதுன்னு ரொம்ப அழகா கத்துக் கொடுக்கிறாங்க. கத்துக்கிட்டு இன்னைக்கு ராத்திரியே உங்க வீட்டு மொட்டை மாடிக்கு போய் துருவன், சப்தரிஷிகள், இவங்களோடெல்லாம் உறவாடிட்டு வந்து படுங்க. அடுத்த நாள் காலையில எழுந்திருக்கும்போது சும்மா, புதுசா பொறந்த மாதிரி இருக்கும்!

Learn: Identify constellations, stars, planets and how to navigate at night

பின்குறிப்பு: ராத்திரி நேரத்துல வேற முக்கியமான வேலைங்களுக்கெல்லாம் நேரம் ஒதுக்கி வச்சிருக்கும் வளர்ந்த மனிதர்கள் இந்த மாதிரி சின்னப்பசங்க விஷயத்தையெல்லாம் கண்டுக்கப்படாது

குழந்தை திருமணத்தை தடுத்து நிறுத்திய பள்ளிச் சிறுமிகள்
பங்களாதேஷில் இன்று நடக்கிவிருந்த குழந்தை திருமணம் ஒன்று பரபரப்பான முறையில் தடுக்கப்பட்டது. பங்களாதேஷின் சத்கீரா எனும் ஊரில் உள்ள அப்துல் கரீம் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் படிக்கும் பதிமூன்று வயது மாணவி ஹபீபா சுல்தானா. இவளை இருபத்து மூன்று வயதான இளைஞர் ஒருவருடன் திருமணம் முடிக்க திட்டமிட்டிருந்தார் வறுமையில் வாடும் பெண்ணின் தந்தை. சிறுமி ஹபீபாவுக்கு இந்த திருமணத்தில் விருப்பம் இல்லை என்றாலும், அவளால் தன் தந்தையின் முடிவை மறுக்கும் துணிவில்லை. இந்நிலையில் தன் வகுப்புத் தோழிகளிடம் தனக்கு கட்டாய திருமணம் நடக்கவிருக்கும் விபரத்தை கூறியிருக்கிறாள் ஹபீபா. உடனே இக்கட்டில் இருந்த தன் தோழிக்கு ஆதரவாக ஒன்று கூடி தங்கள் குரலை உயர்த்தினர் இந்த பள்ளிச் சிறுமியர். கிட்டத்திட்ட 50 பள்ளி மாணவிகள் பள்ளியின் எதிரில் ஒன்று கூடி ஹபீபாவின் திருமணத்தை நிறுத்துமாறு போராட்டம் நடத்தினர். மாணவிகளின் பெற்றோர்களும் ஹபீபாவின் தந்தையிடம் திருமணத்தை நிறுத்துமாறு பேசிப்பார்த்தனர். ம்ஹூம், இதற்கெல்லாம் அசைந்துகொடுக்கவில்லை ஹபீபாவின் தந்தை. சிறுமிகளும் விட்டுக் கொடுக்கவில்லை. சட்டவிரோதமாக ஹபீபாவுக்கு நடக்கவிருக்கும் குழந்தைத் திருமணத்தை தடுக்குமாறு மனு ஒன்றை எழுதி, காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர் இந்த சிறுமியர். அதன் பின் காவல்நிலையத்தினர் ஹபீபாவின் தந்தையை எச்சரித்தவுடன் அவரால் தன் திட்டத்தை நிறைவேற்ற முடியவில்லை, குழந்தை திருமணம் தடுக்கப்பட்டது. சிறுமிகள் தங்கள் உரிமையை நிலைநாட்டினர்.

மேலும் விவரங்களுக்கு: BBC NEWS | South Asia | Child wedding ’stopped by pupils’

கடவுள் சிரிக்கும் தருணங்கள்
கடவுள் இரண்டு வேளைகளில் சிரிக்கிறார். இரு சகோதரர்கள் தங்களுக்குள் நிலத்தை பிரித்து, குறுக்கே கயிற்றைப் பிடித்து, “இந்தப் பக்கம் என்னுடையது. அந்தப் பக்கம் உன்னுடையது” என்று சொல்லிக் கொள்ளும்போது அவர் சிரிக்கிறார். “இந்தப் பிரபஞ்சமே என்னுடையது. இதில் ஒரு துண்டு நிலத்தை வைத்துக்கொண்டு இந்தப் பக்கம் என்னுடையது, அந்தப் பக்கம் உன்னுடையது என்கிறார்களே!” என்று நினைத்துச் சிரிக்கிறார்.

கடவுள் மற்றும் ஒருமுறை சிரிக்கிறார். குழந்தையின் நோய் தீர்க்க முடியாததாக உள்ளது. தாய் அழுது கொண்டிருக்கிறாள்; வைத்தியர் அவளிடம், “அம்மா, பயப்படாதே. நான் குணப்படுத்தி விடுகிறேன்” என்று சொல்கிறார். அப்போதும் கடவுள் சிரித்துக் கொள்கிறார். குழந்தை இறக்க வேண்டும் என்பது கடவுளின் விருப்பமானால், யாராலும் அதைக் காக்க முடியாது என்பது வைத்தியருக்குத் தெரியவில்லை.

(ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுதமொழிகள், பக்கம்: 515-516)

கழிவு மூலம் எரியும் தெருவிளக்குகள்
சென்னையை அடுத்த திருநீர்மலையில் உள்ள TNHB காலனியில் கழிவுப் பொருட்கள் மூலம் மின்சாரம் தயாரித்து தெருவிளக்குகளை எரியவைக்கும் சோதனை கடந்த சனிக்கிழமை அன்று நடந்தது. அதின்படி காலனியில் உள்ள 240 இல்லங்களிலிருந்து சேகரிக்கப்படும் கழிவுகளை வைத்து மீத்தேன் எரிவாயு தயாரித்து, அதன் மூலம் ஜெனரேட்டர்களை இயக்கி மின்சாரம் தயாரிக்கப்பட்டது. இந்த மின்சார சக்தி அங்கிருந்த தெரு விளக்குகளை இயக்க பயன்படுத்தப்பட்டது. இந்த சோதனை திருப்திகரமாக இருந்ததாக சோதனை செய்தவர்கள் குறிப்பிட்டனர். மேலும் விவரங்களுக்கு: The Hindu: Tiruneermalai can now use biogas for streetlights

மாநகரங்களில் குப்பை, கழிவுநீர் போன்றவற்றை அகற்றுவது பெரும் சவாலாகவே உள்ளது. இந்த கழிவுகளை பயன்படுத்தி எரிபொருள் தயாரித்தால் ஒரே கல்லில் இரண்டு மாங்காய்! குறைந்த செலவில் எரிபொருளும் தயாரிக்கலாம், சுற்றுச் சூழல் மாசடைவதையும் தடுக்கலாம்.

சுற்றுச்சூழல் மாசடைவதற்கு வழிவகுக்கும் மற்றொரு முக்கிய காரணி பாலிதீன் பைகள். ஆம், துணிக்கடை முதல் காய்கறி கடை எங்கும் பொருட்களை வைத்து தர பயன்படும் அதே பாலிதின் பைகள் தான். மிகவும் சௌகர்யமான, எளிமையான பைகள் தான். ஆனால் பிரச்சனை என்னவென்றால் இந்த பாலிதின் பைகள் மக்காத தன்மை கொண்டவை. சரியான முறையில் அகற்றாமல், மறுசுழற்சி செய்யாமல் விட்டால் சுற்றுச்சூழல் பெருமளவு மாசடையும். சென்ற வருடம் மும்பையில் மழை பெய்து பெருவெள்ளம் வந்தது நினைவிருக்கலாம். மும்பை மக்கள் தூக்கியெறிந்த பாலிதீன் பைகள் மக்காமல் பெருகிப்போய் மும்பை நீர்நிலைகளை அடைத்துக் கொண்டதே வெள்ளத்திற்கு முக்கிய காரணம் (Global warming மற்றொரு முக்கிய காரணம்).

சரி, இந்த ப்ளாஸ்டிக் பைகளை வைத்துக்கொண்டு என்ன தான் செய்வது? ‘ரோடு போடலாம்’ என்று சொல்கிறார் மதுரை தியாகராய கல்லூரியின் டீன் ஆர். வாசுதேவன். ப்ளாஸ்டிக் குப்பைகளை உருக்கி தார் உடன் கலந்து போடப்படும் ரோடு மிகவும் உறுதியாக விளங்கும் என அவர் கூறுகிறார். ஒரு டன் ப்ளாஸ்டிக் குப்பையை பயன்படுத்தி ஒரு கிலோமீட்டர் ரோடு போடலாமாம்! மேலும் விவரங்களுக்கு: The Hindu: “Adoption of innovative technologies vital for nation’s development”

தொடர்பான இணைப்புகள்:

நகர்ப்புற திடக்கழிவுகளிலிருந்து எரிசக்தி! — என். விட்டல் அவர்களின் கட்டுரை

குப்பையை எங்கே போட்டீங்க?

ஸ்வீடன் நாட்டில் மதுபானம் எரிபொருளாக மாற்றப்படுவது பற்றி முன்பு பதிந்திருந்தேன். அதையும் பார்க்கவும்.

மூளைவளர்ச்சி குன்றிய மாமேதை!
அரிது அரிது மானிடராய் பிறத்தல் அரிது

அதிலும் கூன் குருடு செவிடு பேடு நீங்கிப் பிறத்தல் அரிது

என்று பாடினார் ஔவையார்.

சிதம்பரத்தைச் சேர்ந்த லலித்குமார் பிறவியிலேயே ஊனமுற்றவர், பார்வையற்றவர், கேட்கும் திறன் இல்லாதவர், மூளை வளர்ச்சி குன்றியவர். இன்று பதினெட்டு வயதாகும் இவர் திருக்குறள், தேவராம், திருவாசகம் எல்லாம் மனப்பாடம் செய்து சொல்கிறார், யோகாசனம் பழகி முன்னூற்றம்பது ஆசனங்களுக்கு மேல் செய்து காட்டுகிறார், குடியரசுத் தலைவர் கையால் பரிசு வாங்கியிருக்கிறார். அதிசயமாக இருக்கிறதல்லவா? இவரைப் பற்றியும், இவரை பொறுமையுடனும், நம்பிக்கையுடனும் வளர்த்து ஆளாக்கிய இவரது பெற்றோரைப் பற்றியும் இந்த மாத மங்கையர் மலரில் “யாதுமாகி நின்றாள்” என்ற பெயரில் நம்பிக்கையூட்டும் கட்டுரை ஒன்று வந்துள்ளது. லலித்குமாரை வளர்த்து சாதனையாளனாக ஆக்க அவரது பெற்றோர்கள் மேற்கொண்ட முயற்சிகள், புரிந்த தியாகங்கள் தான் என்னென்ன! இந்த கட்டுரையைப் படித்தபோது எனக்கு ஹெலன் கெல்லர், ஆனி சுலைவன் ஆகியோரின் நினைவு தான் வந்தது. லலித்குமார் மென்மேலும் சாதனைகள் படைத்து நம்பிக்கை நட்சத்திரமாக மிளிர என் வாழ்த்துக்கள்.

இந்த கட்டுரையை இதுவரை படிக்காதவர்களுக்காகவும், ‘மங்கையர்’ மலரை கையில் எடுப்பதை பெரிய கௌரவக்குறைச்சலாக கருதும் தன்மான ஆண் சிங்கங்களுக்காகவும், TSCII காரணத்தால் மங்கையர் மலர் வலைத்தளத்தில் இக்கட்டுரையை படிக்க இயலாதவர்களின் வசதிக்காகவும் கீழே கட்டுரையை copy/paste செய்கிறேன்.

“ஏம்பா அஞ்சலி பாப்பாவை எனக்குத் தங்கச்சியா கடவுள் பொறக்க வெச்சாரு… எதிர் வீட்டுலியோ, பக்கத்து வீட்டுலியோ பிறக்க வெச்சிருக்கலாமேப்பா!” என்று குழந்தைகள் கேட்பார்கள்.

“இது, கடவுளுக்குப் பிடிச்ச குழந்தை. இதைப் பத்திரமா பார்த்துக்கிறதுக்கு, நல்ல அப்பா, நல்ல அம்மா, உங்களை மாதிரி நல்ல அண்ணா, அக்கா வேணும்னுதான் நம்ப வீட்டுக்கு அனுப்பி வெச்சுட்டாரு!” என்று பதில் சொல்வார் ரகுவரன்.

– மணிரத்னம் இயக்கிய ‘அஞ்சலி’ படத்தில் ஒரு காட்சி.

சிதம்பரத்தைச் சேர்ந்த மோகன் - பத்மா தம்பதிக்கு, தேவதை தந்த குழந்தைதான் லலித்குமார். பிறவியிலேயே பார்வை இல்லாமல், மூளை வளர்ச்சி குன்றிப் பிறந்தவன். ஒரு காதில் செவித் திறன் இல்லை; உடலின் வலது பக்க எலும்புகளின் அமைப்பும் சரியில்லை. சமீபத்தில் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் கரங்களால் ‘பெஸ்ட் க்ரியேடிவ் சைல்ட’ என்று தேசிய விருது வாங்கி வந்திருக்கிறான்.

இது எப்படி சாத்தியமானது? லலித்குமாரின் தாயார் பத்மா மோகனைச் சந்தித்தபோது…

நான் ஒரு பி.எஸ்ஸி., பட்டதாரி ஸ்டேட் பாங்க்கில் பணியிலிருந்த மோகனுடன் திருமணம் ஆனது. பெரியவர்கள் நிச்சயித்த திருமணம்.

போளூரில் கூட்டுக் குடும்ப வாழ்க்கைத் தொடங்கியது. அன்பான புகுந்த வீடு. அருமையான கணவர். எங்கள் சந்தோஷமான வாழ்க்கைக்குச் சான்றாக நான் கர்ப்பமானேன். எனக்கு நாற்பது நாளான போது, புட்டம்மை கண்டது. என் மாமியார் சுக்கு, சீரகக் கஷாயம் வைத்துக் கொடுத்தார். மறு நாளே ஜுரம் குறைந்து விட்டது. அதனால் யாரும் அதைப் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.

1989. அக்டோபர் 16ம் நாள். எனக்கு ஆண் குழந்தை பிறந்தது. “பரணி நட்சத்திரத்தில் பையன் பிறந்திருக்கான்… தரணியை ஆளப் போறான்”ன்னு சொல்லிச் சொல்லி மகிழ்ந்தார்கள்.

குழந்தை பிறந்தபோது எங்க அப்பா, அலுவலக வேலையாக ஜப்பான் போயிருந்தார். பேரன் பிறந்த செய்தியைக் கேட்டதும், சிங்கப்பூரில் இறங்கி, விதவிதமான பொம்மைகள் வாங்கிக் கொண்டு நள்ளிரவு ஒரு மணிக்கு, ஏர்போர்ட்டிலிருந்து நேரே மருத்துவமனை வந்துவிட்டார். ஆழ்ந்து தூங்கிக் கொண்டிருக்கும் பேரன் லலித்குமாரின் முகத்துக்கு எதிரே வண்ண வண்ண பொம்மைகளை ஆட்டி ஆட்டி காட்டி ரொம்ப நேரம் கொஞ்சிக் கொண்டிருந்தார்.

பச்சையோ, சிவப்போ மட்டுமல்ல… தன்னுடைய பேரனால் இந்த உலகில் உள்ள எதையுமே பார்க்க முடியாது என்று அவருக்கு அப்போது தெரியாது!”

“குழந்தைக்கு மூன்று மாதமானது. குழந்தையைக் கூர்ந்து கவனித்த எனக்கு என்னவோ சந்தேகம் ஏற்பட்டது. தாய்ப்பால் குடிக்கும் போது கூட, அவன் எதையோ துழாவுவதாகப்பட்டது. எழும்பூர் கண் மருத்துவமனைக்குப் போனோம். பாரிசோதித்து விட்டு, “உங்கக் குழந்தைக்கு இரண்டு கண்களிலும் பார்வையில்லை!” என்று சொன்னார்கள். என் மீது ஒரு கூடை நெருப்பை அள்ளிக் கொட்டியது போல இருந்தது. “அய்யோ… என்ன சொல்றீங்க?” என்று அலறியே விட்டேன். ஆனாலும் உள்மனசில் ஒரு நம்பிக்கை.. ‘தப்பா டயக்னாஸிஸ் பண்ணியிருப்பாங்க!’ என்று தேற்றிக் கொண்டு, மறுநாளே சங்கரநேத்ராலயா போனோம். அங்கேயும் அதே பதில்…

டெல்லியில் உள்ள ‘ஆல் இந்தியா இன்ஸ்டிடியூட் ஆஃப் மெடிக்கல் சயின்ஸஸ்’ கழகத்தில் காண்பித்தோம். சங்கர நேத்ராலயாவில் சொன்னதைத்தான் சொன்னார்கள்.

“உங்கள் குழந்தைக்கு ‘பீட்டர்ஸ் அனாமலி’ என்கிற பிரச்னை உள்ளது. மூன்று வயதில்தான் அறுவை சிகிச்சை செய்ய முடியும். மாற்றுக்கண் பொருத்துவதைத் தவிர வேறு சிகிச்சைகள் பயன்தராது’ என்று திட்டவட்டமாகச் சொல்லிவிட்டார்கள்.

லலித்தின் ஒரு வயதில் எக்மோர் மருத்துவமனையில் நடந்த சிகிச்சையும் தோல்வியடைந்தது.

இது தவிர, சித்தா, அக்யுபஞ்சர் முதல் கோயில், குளம், பாரிகாரம் என யார் யார் என்ன சொன்னாலும் அதைச் செய்ய ஆரம்பித்தோம். குழந்தையை மடியில் போட்டுக்கிட்டு, “ஐயோ… என் குழந்தைக்குக் கண் இல்லையே! இதை எப்படி வளர்ப்பேன்!”ன்னு நினைப்பேன். என்னையுமறியாமல் துக்கம் கிளம்பி, கண்ணீர் பொங்கும்.

ஒருமுறை ஹோமியோபதி டாக்டரைப் பார்த்து விட்டு வெளியே வரும்போது, நான் அழுதுகொண்டே பால் கொடுப்பதை அவர் பார்த்துவிட்டார்.

“நீயும் உன் குழந்தையும் வேறு வேறல்ல. உன் ஜீவன்தான் அது! உன் உணர்வுகள் அதையும் பாதிக்கும். நீ அழுதுகிட்டே பால் கொடுத்தா, அது விஷமா மாறிடும்”னு சொன்னார்.

அதிலிருந்து அழறதைக் கூட நிறுத்திட்டேன். சென்னையில் உள்ள லிட்டில் ஃப்ளவர் பள்ளிக்குச் சென்று, லலித்தைப் பழக்கக் கற்றுக் கொண்டேன். ‘ப்ரெய்லி’யும் படித்தேன்.

“என் குழந்தைக்கு ஒரு வருஷம் முடிந்தபோது, அவனுக்கு மற்ற புலன்களிலும் ஏதோ குறைபாடு இருப்பதாகத் தோன்றியது. நடுவே வலிப்பும் வந்து அவஸ்தைப்படவே, நியூராலஜிஸ்ட்கிட்டே போனோம். டாக்டர் பாப்பகுமாரிகிட்ட போனோம். அவங்க ரொம்பவே அனுபவசாலி! பார்த்தவுடனேயே சொல்லிட்டாங்க…” “ஆடிஸம், மென்டல் ரிடார்டேஷன் இருக்கேம்மா” என்று!

“அப்படின்னா என்ன டாக்டர்?”னு கேட்டேன்.

“மூளை வளர்ச்சி குறைபாடும்மா!”ன்னாங்க பாருங்க…

தலையில் இடி விழுந்த அதிர்ச்சியில நிலைகுலைஞ்சு போயிட்டேன்.

“இந்தப் பிஞ்சை ஏதாவது உருப்படியா ஆக்காமல் விடக்கூடாதே! என்ன செய்வேன்? என்ன செய்வேன்?”னு மனசும் உடலும் துடிதுடித்தது.

ஆடிஸம் குறைபாடுகளுக்கு வேலூர் சி.எம்.ஸியில் டாக்டர் எம்.ஸி. மேத்யூ ரொம்பப் பிரபலமானவர் என்று அறிந்ததும் அங்கேயும் ஓடினோம்.

லலித்தை விட கொஞ்சம் தேறிய குழந்தையைப் பார்க்கும்போது, “நம்ம குழந்தையும் இவனைப் போல குணமாயிடுவான்!” என்று ஆறுதல் கொள்வேன்.

எனக்கு எந்தக் காலத்திலும் ஆரோக்கியமான குழந்தையைப் பார்த்தால் பொறாமையோ, சுயபச்சாதாபமோ ஏற்படவே ஏற்படாது. அந்தக் குணத்துக்காகவும் நான் கடவுளுக்கு நன்றி சொல்வதுண்டு” என்று சொல்லி நிறுத்தினார் பத்மா மோகன்.

“ஒரு தாயா…உங்க மனஉணர்வைச் சொல்லிக்கிட்டே வந்தீங்க… உங்க கணவர்… அவரோட ரியாக்ஷன் என்ன…?” என்று கேட்டோம்.

“நீங்க அவர்கிட்டேயே கேளுங்களேன்!” என்றார் பத்மா சின்ன சிரிப்புடன்.

ஊஞ்சலில் உட்கார்ந்திருந்த லலித்தை அன்புடன் அணைத்தவாறே, “ஆரம்பத்துல ரொம்பவே ‘ஷாக்’ ஆயிட்டேன். அப்புறமா… சாரி..ஆனது ஆயிடுச்சு. அதையே நினைச்சுக் கவலைப்படறதுல அர்த்தமில்லை. இனி என்ன செய்யலாம்னு பார்ப்போம்னு தீவிரமா இறங்கிட்டேன். லலித், அவனோட சிகிச்சை இதுக்குத்தான் வீட்ல முதல் உரிமை. மத்த எல்லாமே அப்புறம் தான்னு முடிவான பிறகு… பத்மாவோட எந்த முயற்சிக்கும் நான் தடை போடலை” என்றார்.

“நிஜம்தான்! நான் இன்னிக்கு.. இந்த டாக்டரைப் பார்க்கப் போறேன். எனக்கு இவ்ளோ பணம் வேணும்” என்பேன். கொஞ்சமும் முகம் சுளிக்காமல் எடுத்துத் தருவார். அவரோட பொறுமையும் ஒத்துழைப்பும் இல்லைன்னா எதுவுமே நடந்திருக்காது” என்கிறார் பத்மா.

இதற்கு நடுவே மோகனுக்கு சிதம்பரத்துக்கு மாற்றலாகி விடவே, இன்னொரு துன்பமும் நேர்ந்திருக்கிறது. திடீரென்று பத்மாவுக்கு முதுகுத்தண்டில் டிஸ்க் நழுவி, ஒன்றரை வருடம் படுத்த படுக்கையாக இருந்திருக்கிறார். வலி மிகுந்த அந்த அனுபவம் பற்றிப் பேசினார் பத்மா.

“இடுப்புக்குக் கீழே உணர்வே இல்லாமல், அப்படியே கிடந்தேன். உதவிக்கு அம்மாவும், தங்கைகளும் இருந்தாலும் குழந்தையைப் பார்த்துக்கறது, பெட்ஃபேன் வைக்கிறது எல்லாமே என் கணவர்தான். அப்புறமா ட்ராக்ஷன் போட்டாங்க. பிஸியோதெரபி எடுத்துக்கிட்டதுல ஏதோ கொஞ்சம் குணமாச்சு. “யோகா பண்ணுங்க. அப்பத்தான் ரிலீஃப் கிடைக்கும்”னு டாக்டர் சொல்லவே, யோகா கற்றுக் கொண்டேன்.

‘என்ன ஆச்சாரியம்! யோகாவினால் நல்ல மாற்றம் தொரிஞ்சது. நான் மறுபடி நார்மலாகி விட்டேன். அப்பத்தான் எனக்கு அந்த ஐடியா தோணுச்சு. “நம்ப லலித்தையும் யோகா செய்ய வைக்கலாமே!”ன்னு முதல்ல பிராணாயாமம் செஞ்சு காட்டணுமே!’ மூச்சை இழுத்து விடு!”ன்னு சொன்னா அவனுக்கு எப்படிப் புரியும்?

அவனால பார்த்தும் செய்ய முடியாதே! அதனால ஒரு மல்லிகைப் பூவை மூக்குல வெச்சு, ஸ்டெதெஸ்கோப் போல எதையாவது நெஞ்சுல பதிச்சா, அவன் ஹாஸ்பிடல் நினைப்புல வாசனையை முகர்வான்! அதையே நாளடைவுல தானாவே செய்ய ஆரம்பிச்சான். முதல்ல அவனை பத்மாசனத்துல உட்கார வெக்கறதே கஷ்டமா இருந்தது. அவன் விறைப்பா வைக்க வேண்டிய உறுப்பு மேலே கையை அழுத்தி வைச்சா, உடனே அவன் ‘டைட்’ ஆக்கிக் கொள்வான். தளர்வா இருக்கணும்னா, அதுக்குத் தடவித் தரணும். இப்படி ‘நுகர்வு’ ‘ஸ்பாரிசம்’, ‘ஒலி’ இந்த மூன்று புலன்களின் மூலம் மெள்ள மெள்ள ஒவ்வொரு ஆசனமாகக் கற்க ஆரம்பித்தான்.

இதற்காக, அண்ணாமலை பல்கலைக் கழகத்தின் உடற்பயிற்சியாளர் நடராஜன் பட்டபாடு இருக்கே! அவனுடன் மல்லுக்கு நின்று, பொறுமையாகச் சொல்லிக் கொடுத்தார். இன்றைக்கு லலித்துக்கு முந்நூற்று ஐம்பது ஆசனங்களுக்கும் மேலாகத் தொரியும் என்றால், முழு பெருமையும் நடராஜன் மாஸ்டரையே சாரும்” என்று நன்றியுடன் சொன்னார் பத்மா.

“யோகா மட்டுமல்லாது, திருக்குறள், தேவாரம், திருவாசகம், புரந்தரதாசர் கீர்த்தனைகள் என நிறைய மனப்பாடம் செய்து வைத்திருக்கிறான். பதினேழு வயதாகும் லலித்துக்கு நான்கு வயதுக் குழந்தையின் மனவளர்ச்சிதான் உள்ளது. அவனுக்கு ஞாபகசக்தி அபாரமாக உள்ளது. அதுதான் லலித்தின் ப்ளஸ் பாயிண்ட்! அதுவும் முழு கவனத்துடன் சில நிமிடங்கள்தான் இருப்பான். அந்த நேரத்தில் என்ன சொல்லிக் கொடுத்தாலும், அதை அப்படியே நினைவில் கொண்டு விடுகிறான். மிருதங்க கிளாஸ் கூடப் போறான்” என்றார் மோகன்.

லலித்தின் திறமையைப் பார்த்து நெகிழ்ந்துபோன அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தினர், லலித்துக்கு இலவச சீட்டும் கொடுத்து, அவன் ‘யோகாவில் டிப்ளமா’ பெற்றதற்கான சான்றிதழும் தந்திருக்கிறார்கள்.

‘யோகா ரத்னா’ ‘யோக பத்மா’ போன்ற உயாரிய விருதுகளோடு, அண்ணாமலைப் பல்கலைக் கழகத்துக்கு ஷீல்டும் வாங்கி வந்திருக்கிறான் லலித். யோகா சம்பந்தப்பட்ட எந்தப் போட்டிக்குச் சென்றாலும் பரிசுகளை அள்ளிக் குவிக்காமல் லலித் வருவதே இல்லை என்ற நிலை… டெல்லிக்கே சென்று குடியரசுத் தலைவர் அப்துல்கலாமிடமும் விருது, பணம் அன்பளிப்பு வாங்கி வந்திருக்கிறான்.

“அந்த 25,000 ரூபாயை, அவன் படித்த பள்ளிக்கே நன்கொடையாகத் தந்து விட்டோம்” என்கிறார் மோகன்.

“லலித் பிறந்த மூணாவது மாசத்துல இருந்து, எங்க வாழ்க்கை முழுக்க ஏதாவது டாக்டர், மருந்து, ஸ்கேனிங்னே ஓடிப் போயிடுச்சு. நாங்க சினிமா, ஷாப்பிங்னு வெளியே போனதே இல்லை. எப்பவாவது லலித்துக்காக பீச் போவோம். தீபாவளி, பொங்கல்னு எதையும் கொண்டாடறதில்லை. லலித்தோட பிறந்த நாளான அக்டோபர் 16ம் தேதியை மட்டும் ரொம்ப விமர்சையா கொண்டாடுவோம். ஏன்னா, அந்த நாளோடு எங்க வாழ்க்கை வேறொரு உலகமா மாறிடுச்சு” என்கிறார் பத்மா.

“உங்க இருவருடைய மனதிடமும், விடாமுயற்சியும் பெண்களுக்குப் பாடமாக அமைய வேண்டியன. அதைத் தவிர வேறென்ன சொல்ல விரும்பறீங்க பத்மா?” என்று கேட்டபோது,

“ஒவ்வொரு பெண் குழந்தையும் பூப்படைந்த நேரத்தில் ‘ஆன்ட்டிஃ ரூபெல்லா’ என்ற தடுப்பூசியைப் போட்டுக் கொண்டால், கர்ப்பக் காலத்தில் வைரஸ் காய்ச்சலால் கருவுக்குப் பாதிப்பு ஏற்படாதிருக்கும். இருபது வருடங்களுக்கு முன்பு எனக்கு இதை யாரும் வலியுறுத்தாததால், சிறப்புக் குழந்தையைப் பெற்றுவிட்டேன். இந்தக் கொடுமையான அனுபவம் யாருக்கும் வரக்கூடாது என்பதே பிரார்த்தனை. ஒருவேளை… பூர்வஜென்ம வினையால், ஊனமுற்ற குழந்தைகள் பிறந்தால், எங்களுக்குக் கிடைத்தது போன்ற ஆதரவான, அன்பான உறவினர்கள் அமைய வேண்டும்…” என்றார் பத்மா தன் தாயார், தங்கையின் தோள்களை அணைத்தபடி!

தனது தந்தை சிங்கப்பூரிலிருந்து லலித்துக்காக வாங்கி வந்த பொம்மைகளை பத்மா இன்னமும் பத்திரமாகப் பாதுகாத்து வைத்திருக்கிறார்.

“லலித்தின் 18வது வயதில் அவனது கண்களைப் பாரிசோதிக்கும்போது, நரம்புகள் திருப்தியான நிலைமையில் இருந்து, மாற்றுக்கண் அறுவை சிகிச்சை நடந்து, லலித்துக்குப் பார்வையும் கிடைத்தால், தாத்தா வாங்கித் தந்த வண்ண பொம்மைகளைப் பார்த்து சந்தோஷப்படுவானே!” என்கிறார் நம்பிக்கையுடன்.

அவரது நம்பிக்கை பலிக்கட்டும்!

பேட்டி: அனுராதா சேகர்

படங்கள்: ஸ்ரீஹரி

http://www.mangayarmalaronline.com/monthly/page11.asp

அதுசரி, இந்த தமிழ் பத்திரிகைகள், தினசரிகள் எல்லாம் ஏன் இன்னும் யுனிகோடுக்கு மாறாமல் முரண்டுபிடிக்கிறார்கள்?

பரமஹம்ச நித்யானந்தரின் சொற்பொழிவு
நேற்றிரவு youtubeல் மேய்ந்து கொண்டிருந்த போது கீழுள்ள பரமஹம்ச நித்யானந்தரின் சொற்பொழிவை காண நேர்ந்தது. அவருக்கு சிறிய வயதில் ஏற்பட்ட ஆன்மீக அனுபவம் பற்றியும் நம் வாழ்க்கைக்கு சில உபயோகமான அறிவுரைகளையும் கூறுகிறார்.

(குறிப்பு: ஆங்கில சொற்பொழிவு. கொஞ்சம் நீளமான வீடியோ, 52 நிமிடங்கள்)

நித்யானந்தர் தமக்கு ஏற்பட்டதாக கூறும் ஆன்மீக அனுபவம் கேட்க சுவாரஸ்யமாய் உள்ளது. அப்போது அவரால் தன், முன், பின், இடது, வலது, மேலே, கீழே என அனைத்து பக்கங்களில் இருப்பதையும் 360˚ பார்வையில் காணமுடிந்ததாக கூறுகிறார், மேலும், தன்னைச் சுற்றியிருந்த அனைத்து பொருட்களிலும் தன்னையே உணர்ந்ததாகவும் கூறுகிறார்.

என்னுடைய முந்தைய பதிவில் இருபரிமாண, முப்பரிமாண, நாற்பரிமாண உலகங்கள் பற்றியும், பரமஹம்ச யோகானந்தர், மற்றும் வேறு சிலரின் ஆன்மீக அனுபவங்கள் எப்படி hypothetic நாற்பரிமாண பார்வையுடன் ஒத்துப் போகிறது என்பது பற்றியும் எழுதியிருந்தேன். யோகானந்தர் முதலான அந்த பட்டியலில் பரமஹம்ச நித்யானந்தரையும் சேர்த்துக் கொள்ளலாம்.

பின்வரும் அறிவுரைகளையும் நித்யானந்தர் வீடியோவில் கூறுகிறார்.

வாழ்க்கையில் பல சமயங்களில் சரியான முடிவை எடுக்க முடியாமல் நாம் குழப்பம் அடைகிறோம். அப்படிப்பட்ட தருணங்களில் நம் ஆன்மீக குரு ஆதே சூழ்நிலையில் எப்படி செயல்படுவார் என சிந்திக்க வேண்டும். சிறிதும் யோசிக்காமல் நாமும் அதே போல் உடனுக்குடனே செயல்பட்டு அந்த சந்தர்ப்பத்தை எதிர்கொள்ள வேண்டும்.

பல சந்தர்ப்பங்களில், சரியான செயல்பாடு எது என நமக்குத் தெரிந்திருந்தும், பழக்கம் காரணமாகவோ, அல்லது தன்னம்பிக்கை இல்லாத காரணத்தாலோ நாம் சரியாக செயல்படுவதில்லை. ஒவ்வொரு முறையும் நாம் இவ்வாறு சரியான செயல்பாடு தெரிந்திருந்தும் செயல்படாமல் இருக்கும் போது, கர்மவினைகளில் மேலும் மேலும் அகப்பட்டுக் கொள்கிறோம். குடிப்பழக்கம், போதை, போன்ற அடிமைத்தனங்களை இதற்கு உதாரணமாக கூறலாம். போதைப் பொருள் கேடானது என்று அதைப் பயன்படுத்தும் அனைவருக்குமே தெரிந்திருக்கிறது. ஆனாலும் ஏன் அவர்களால் அந்த பழக்கத்தை விட முடியவில்லை? சரியான செயல்பாடு தெரிந்திருந்தும் தவறாக செயல்பட்டால் நம்மை ஆண்டவனாலும் காப்பாற்ற முடியாது! ஒரு விஷயத்தில் சரியான செயல்பாட்டை தீர்மானித்து விட்டவுடன் மறு யோசனை கூடாது. உடனே செயல்பட்டு அந்த விஷயத்தை முடித்துவிட்டு மறுவேலை பார்க்க வேண்டும்.

நம் குருவை மட்டுமே நாம் எல்லா சந்தர்ப்பங்களிலும் பின்பற்ற வேண்டும். மற்ற மனிதர்கள் சமயங்களில் நமக்கு உதவலாம். ஆனால் அப்படிப்பட்ட சாதாரண மனிதர்களை நாம் எப்பொழுதும் பின்பற்றக் கூடாது. சாதாரண மனிதர்கள் நமக்கு சரியான அறிவுரைகள் வழங்கும்போது, அது அவர்களுடை அறிவுரை அல்ல, அவர்கள் மூலமாக நம் குருவே அறிவுறுத்துகிறார் என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

பரமஹம்ச நித்யானந்தர் யார், அவர் செயல்பாடுகள் என்ன என்பதெல்லாம் எனக்கு அவ்வளவாக தெரியாது. அவருடைய கட்டுரைகளை முன்பு குமுதத்தில் படித்திருக்கிறேன் (இப்போதெல்லாம் படிப்பதில்லை. கடைசியாக குமுதம் படித்து ஒரு வருடத்துக்கு மேல் ஆகிறது). அவர் கூறிய அறிவுரைகளும் புதிதல்ல, நமக்கே தோன்றுபவையும் பல இடங்களிலும் ஏற்கனவே கேட்டவையும் தான். ஆனால் என் வாழ்க்கையில் சில முடிவுகளை எடுக்க யோசித்துக் கொண்டிருக்கும் இந்த தருணத்தில் நித்யானந்தரின் அறிவுரைகளை கேட்டவுடன் மனத்தெளிவு ஏற்பட்டது. “சச்சிதானந்தம் மட்டுமே அனைவருக்கும் குரு” என்று கூறியுள்ளார் ராமகிருஷ்ண பரமஹம்சர். மேலே குறிப்பிட்ட நித்யானந்திரின் மூன்றாவது அறிவுரைப்படியும் அந்த பரம்பொருளாகிய குருவே நித்யானந்தரின் மூலம் எனக்கு இத்தருணத்தில் அறிவுறுத்தியதாக நான் எடுத்துக்கொள்கிறேன். இன்றைய பதிவு மூலம் எவராவது பயனடைந்திருப்பாரானால், சச்சிதானந்தமே இப்பதிவு மூலமாக அவருக்கும் அறிவுறுத்தியதாக எடுத்துக்கொள்வாராக.

தட்டை உலகம் — நிஜமாவே அப்படி ஒன்னு இருக்கா?
உலகம் தட்டை என்று ஆதி காலத்து மனிதர்களெல்லாம் நினைத்துக் கொண்டிருந்தார்களாமே. நானும் சிறியவனாக இருந்த போது அப்படித்தான் புரிந்து கொண்டிருந்தேன். பின்னர் பள்ளி சென்று விஞ்ஞானப் பாடம் எல்லாம் படித்த பிறகு தான் உலகம் உருண்டை என்று தெளிந்தது. ஆனால் நான் இங்கே கூறுவது நாம் வாழும் தட்டை/உருண்டை உலகம் பற்றியதல்ல, இது தட்டையான 2D உலகம் பற்றியது. வீடியோவைப் பாருங்கள். அதில் வெள்ளை தாடி வைத்த சூப்பர் தாத்தா ஒருவர் இந்த 2D தட்டை உலகம் பற்றியும் அதில் வசிக்கக் கூடியவர்கள் பற்றியும் அருமையாக விளக்குகிறார்.

மனிதர்களாகிய நாம் பார்ப்பது, உணர்வது, வாழ்வது எல்லாம் நீளம், அகலம், உயரம் என்ற மூன்று பரிணாமங்களைக் கொண்ட 3D உலகத்தில் தான். உதாரணமாக உங்கள் வீட்டின் ஒரு அறையை எடுத்துக் கொண்டால் அதற்கு நீளம், அகலம், உயரம் என்ற மூன்று பரிணாமங்கள் உண்டு. ஆனால் அறையின் தரையை எடுத்துக் கொண்டால் அதற்கு நீளம், அகலம் என்ற இரு பரிணாமங்களே. தரைக்கு உயரம் கிடையாது. அதே போல் உருண்டையான ஒரு பந்து 3D, ஆனால், காகிதத்தில் ஒரு வட்டம் போட்டீர்களானால் அது 2D.

மேலே கண்ட வீடியோவில் உள்ள பிழை ஒன்றை கவனித்தீர்களா? வீடியோவில் வரும் இருபரிமாண உலகம் உண்மையில் முப்பரிமான உலகமே. அது நீள அகலத்துடன், குறுகிய உயரமும் கொண்டது. உண்மையில் முப்பரிமாண உலகத்தைத் தவிர மனிதர்களாகிய நம்மால் வேறு எதையும் சிந்திக்க முடியாது. ஒரு பேப்பரை எடுத்துக் கொண்டால் கூட அதற்கும் மிகச்சிறிய அடர்த்தி உண்டு. இதனால் இரு பரிமாண உலகம் சாத்தியமில்லை என்று கூறிவிட முடியாது. மாறாக, நாம் இதுவரை கண்டிராத 2D உலகம் எங்கும் உள்ளது, அதே போல் நமக்கு மேலான 4D உலகமும் சாத்தியமே! யார் கண்டது, வீடியோவில் முப்பரிமாண தாடி தாத்தா இருபரிணாம வட்ட நங்கையை அவள் அறியாமேலே காண்பது போல நமக்கு ‘மேலே’ ஒரு 4D மனிதர் இருந்து கொண்டு நாம் செய்பவற்றையெல்லாம் கண்காணிக்கிறாரோ என்னவோ  . இரண்டு, மூன்று, நான்கு அல்ல, நவீன விஞ்ஞான தத்துவமான string theory பதினோரு பரிணாமங்கள் இந்த பிரபஞ்சத்தில் உள்ளது, அதற்கு மேலும் இருக்க வாய்ப்புள்ளது என்றே கூறுகிறது!

இரு பரிமாண 2D தட்டை உலகில் நீங்கள் வாழ்ந்தீர்களானால் அனைத்தையும் கோடுகளாகத் தான் பார்ப்பீர்கள். 2D உலகில் நீங்கள் வாழும் planeஇல் உள்ள கோடுகள் தவிர உங்களுக்கு வேறு ஒன்றும் தெரியாது. நான்கு கோடுகளால் சூழப்பட்ட சதுரம் ஒன்றை காகிதத்தில் வரைந்தீர்களானால் அதை 2D தட்டை உலக வாசிகளால் அப்படியே பார்க்க முடியாது. ஒரு நேரத்தில் ஒரு பக்கத்தை மட்டும் ஒரு கோடாக அவர்களால் பார்க்க முடியும். ஒரு கோணத்திலிருந்து பார்த்தால் அதிகபட்சமாக சதுரத்தின் இரண்டு பக்கங்களை தான் 2D மக்களால் பார்க்க முடியும். ஆனால் 3D மக்களாகிய நாம் அந்த சதுரத்தின் நான்கு பக்கங்களையும் சதுரத்தின் உள்ளே உள்ளதையும் முழுவதாக பார்க்கிறோம்.

அது போல் மேலுள்ள படத்தில் உள்ளது போன்ற ஆறு பக்கங்களால் ஆன 3D தாயக்கட்டை ஒன்றை எடுத்துக் கொண்டால் நம்மால் அதன் ஒரு பக்கத்தை மட்டுமே பார்க்க முடியும். ஒரு கோணத்திலிருந்து பார்த்தால் அதிகபட்சமாக ஒரு நேரத்தில் மூன்று பக்கங்களை (படத்தில் உள்ளது போல்) பார்க்க முடியும். இந்த 2D, 3D வாதத்தை அப்படியே நீட்டிக் கொண்டு போனால், 4D மக்களால் அந்த தாயக்கட்டைகளின் ஆறு பக்கங்களையும் ஒரே நேரத்தில் பார்க்க முடியும். அதெப்படி? நினைத்துப் பார்க்கக் கூட கடினமாக உள்ளது இல்லையா? ம்… பரமஹம்ச யோகானந்தரின் சுயசரிதையான Autobiography of a Yogi இன் ஒன்பதாம் அத்தியாயத்தில் அவருக்கு ஏற்பட்ட ஒரு அனுபவத்தைப் பற்றி யோகானந்தர் குறிப்பிடுகிறார்.

A transforming silence ensued. Just as the modern “talkies” become inaudible motion pictures when the sound apparatus goes out of order, so the Divine Hand, by some strange miracle, stifled the earthly bustle. The pedestrians as well as the passing trolley cars, automobiles, bullock carts, and iron-wheeled hackney carriages were all in noiseless transit. As though possessing an omnipresent eye, I beheld the scenes which were behind me, and to each side, as easily as those in front. The whole spectacle of activity in that small section of Calcutta passed before me without a sound. Like a glow of fire dimly seen beneath a thin coat of ashes, a mellow luminescence permeated the panoramic view.

My own body seemed nothing more than one of the many shadows, though it was motionless, while the others flitted mutely to and fro. Several boys, friends of mine, approached and passed on; though they had looked directly at me, it was without recognition.

The unique pantomime brought me an inexpressible ecstasy. I drank deep from some blissful fount….

யோகானந்தர் கூறுவதெல்லாம் உண்மையா பொய்யா என்ற விவாதத்திற்கு எல்லாம் நான் வரவில்லை. ஆனால், சுற்றியுள்ள அனைத்தையும் ஒரே நேரத்தில் பார்க்கக் கூடிய 4D பார்வைக்கும், அவரது இந்த ஆன்மீக அனுபவத்திற்கும் இருக்கும் ஒற்றுமையைப் பாருங்கள். பலர் தங்களது ஆன்மீக அனுபவத்தை விவரிக்கும்போது இது போலவே விவரிப்பதை நான் கவனித்துள்ளேன். இங்கு தான் விஞ்ஞானமும் ஆன்மீகமும் கை கோர்க்கிறதோ! ஆனால் ஒன்று, இதெல்லாம் சந்தேகத்திற்கு உட்பட்டதே. எனக்கே சொந்தமாக எந்த ஆன்மீக அனுபவமாவது ஏற்படும் வரை இதைப் பற்றி என்னால் அதிகாரப் பூர்வமாக ஏதுவும் கூற முடியாது.

இந்த தட்டை உலகம், கோடு உலகம், புள்ளி உலகம் போன்ற தத்தவங்களை வைத்து Edwin Abbott Abbott என்பவர் Flatland என்ற ஒரு சிறிய நாவலையே எழுதியிருக்கிறார். நேரம் இருந்தால் படித்துப் பாருங்கள். பள்ளி செல்லக் கூடிய மகனோ மகளோ உங்களுக்கு இருந்தால் கண்டிப்பாக படிக்கச் சொல்லுங்கள். சிந்தனையைத் தூண்டும் புத்தகம் அது. Flatland புத்தகத்தின் இணைப்பு.

ஒரு விஷயத்தை எந்த சந்தேகமும் இன்றி உண்மை என உணரும் வரை அதை நம்மால் ஒப்புக்கொள்ள முடியாது, ஒப்புக் கொள்ளவும் கூடாது. அதே நேரத்தில் மனித மூளைக்கும் அறிவுக்கும் எட்டாத பல விஷயங்கள் இயற்கையில் உண்டு என்பதை நாம் ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும். இயற்கை எவ்வளவு விந்தையானது! நாம் காணாதவை, கற்பனை கூட செய்ய முடியாதவை இயற்கையில் என்னென்னவெல்லாம் உண்டோ? கற்றது கைமண் அளவு, கல்லாதது கடலளவு!

விஞ்ஞான மேதை அல்பர்ட் ஐன்ஸ்டின் சொன்னார்,

“Nature shows us only the tail of the lion. But I do not doubt that the lion belongs to it even though he cannot at once reveal himself because of his enormous size.”

மருத்துவருள் மாணிக்கம்
தன்னிடம் வந்த நோயாளியை மரணத்தின் விளிம்பிலிருந்து மீட்டுக் கொண்டு வந்தவரல்ல இவர். ஏழை நோயாளிகளுக்கு இலவசமாக மருத்துவம் செய்பவரா இவர்? அதுவும் அல்ல. பிறகு என்ன தான் செய்தார் இவர்? இவரிடம் அபார்ஷன் சிகிச்சைக்கென வந்த ஒரு பெண், இவரது கவனக் குறைவால் உயிரையே இழந்தார். ஆனால் அதற்குப் பிறகு இந்த மருத்துவர் நடந்துகொண்ட விதம் தான் இவரை ‘மருத்துவருள் மாணிக்கம்’ என்று அழைக்க வைக்கிறது. தன்னை நம்பி வந்த பெண்மணி இறந்தவுடன் உடனே அருகில் இருந்த காவல் நிலையத்துக்குச் சென்று தன் மேல் தானே குற்றம் சுமத்திக் கொண்டு சரணடைந்தார் இந்த மருத்துவர்! தன் மனசாட்சி உறுத்தியதால் இவ்வாறு சரணடைந்ததாக கூறுகிறார். இவர் பெயர் ப்ரத்யுத் குமார் நஸ்கார். மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்தவர். மேலும் விவரங்களுக்கு பார்க்க: CNN-IBN: Doc lodges FIR againt himself

தன்னிடம் வரும் நோயாளியை சோதனை எலியாக பயன்படுத்தி தன் மகனை சாதனையாளனாக ஆக்க முயலும் மருத்துவர்கள் மத்தியில் இப்படியும் ஒரு மனசாட்சி உள்ள மருத்துவர்!