ராத்திரி வானம் பார்க்கிற பழக்கம் உண்டா உங்களுக்கு?

சின்ன வயசிலிருந்தே ராத்திரி படுக்க போறதுக்கு முன்னாடி என்னோட பொழுதுபோக்கு, மொட்டை மாடி குட்டிச்சுவர்ல படுத்துட்டு வானத்தில இருக்கிற நட்சத்திரங்களை வேடிக்கை பார்த்து ரசிக்கிறது. நான் குழந்தையா இருந்தப்பவே எங்க அம்மா எல்லா அம்மாக்களையும் போல் நிலாவை காட்டி தான் எனக்கு சோறு ஊட்டுவாங்களாம் (இப்ப இருக்கிற அம்மாக்களெல்லாம் மெகாசீரியல் காட்டி தான் சோறு ஊட்றது… :? ஹும்). அப்புறம் ஸ்கூல் போற வயசானப்புறம் சாயங்காலம் ஹோம்வொர்க் எல்லாம் முடிச்சுட்டு மாடிக்கு போயிடுவேன். மாடியில அன்னார்ந்து படுத்து வானத்தை பார்த்து இயற்கையோட பிரம்மாண்டத்தை பார்த்து ரசிக்கும்போது நம்மோட வாழ்க்கை, தினசரி டென்ஷன் எல்லாம் ரொம்ப அற்பமா தோனும். ராத்திரி வானம் பார்க்கும் இந்த நல்ல பழக்கம் இப்ப காலேஜெல்லாம் முடிச்சு வேலை பார்க்கும்போது கூட தொடர்ந்துட்டே வருது.

உங்களுக்கும் வானம் பார்த்து நட்சத்திரம், நட்சத்திர மண்டலம் (constellation) எல்லாம் identify பண்ணும் பழக்கம் இருக்கலாம். அப்படி இல்லைன்னா (இருந்தாலும் கூட) இந்த வலைத்தளத்தை போய் பாருங்க. Orion, சப்தரிஷி மண்டலம், துருவ நட்சத்திரம், இந்த மாதிரி முக்கியமா வானத்தில இருக்கற விஷயங்களெல்லாம் எப்படி கண்டுபிடிக்கிறதுன்னு ரொம்ப அழகா கத்துக் கொடுக்கிறாங்க. கத்துக்கிட்டு இன்னைக்கு ராத்திரியே உங்க வீட்டு மொட்டை மாடிக்கு போய் துருவன், சப்தரிஷிகள், இவங்களோடெல்லாம் உறவாடிட்டு வந்து படுங்க. அடுத்த நாள் காலையில எழுந்திருக்கும்போது சும்மா, புதுசா பொறந்த மாதிரி இருக்கும்! :)

Learn: Identify constellations, stars, planets and how to navigate at night

பின்குறிப்பு: ராத்திரி நேரத்துல வேற முக்கியமான வேலைங்களுக்கெல்லாம் நேரம் ஒதுக்கி வச்சிருக்கும் வளர்ந்த மனிதர்கள் இந்த மாதிரி சின்னப்பசங்க விஷயத்தையெல்லாம் கண்டுக்கப்படாது ;)

10 comments ஜூலை 19, 2007

குழந்தை திருமணத்தை தடுத்து நிறுத்திய பள்ளிச் சிறுமிகள்

பங்களாதேஷில் இன்று நடக்கிவிருந்த குழந்தை திருமணம் ஒன்று பரபரப்பான முறையில் தடுக்கப்பட்டது. பங்களாதேஷின் சத்கீரா எனும் ஊரில் உள்ள அப்துல் கரீம் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் படிக்கும் பதிமூன்று வயது மாணவி ஹபீபா சுல்தானா. இவளை இருபத்து மூன்று வயதான இளைஞர் ஒருவருடன் திருமணம் முடிக்க திட்டமிட்டிருந்தார் வறுமையில் வாடும் பெண்ணின் தந்தை. சிறுமி ஹபீபாவுக்கு இந்த திருமணத்தில் விருப்பம் இல்லை என்றாலும், அவளால் தன் தந்தையின் முடிவை மறுக்கும் துணிவில்லை. இந்நிலையில் தன் வகுப்புத் தோழிகளிடம் தனக்கு கட்டாய திருமணம் நடக்கவிருக்கும் விபரத்தை கூறியிருக்கிறாள் ஹபீபா. உடனே இக்கட்டில் இருந்த தன் தோழிக்கு ஆதரவாக ஒன்று கூடி தங்கள் குரலை உயர்த்தினர் இந்த பள்ளிச் சிறுமியர். கிட்டத்திட்ட 50 பள்ளி மாணவிகள் பள்ளியின் எதிரில் ஒன்று கூடி ஹபீபாவின் திருமணத்தை நிறுத்துமாறு போராட்டம் நடத்தினர். மாணவிகளின் பெற்றோர்களும் ஹபீபாவின் தந்தையிடம் திருமணத்தை நிறுத்துமாறு பேசிப்பார்த்தனர். ம்ஹூம், இதற்கெல்லாம் அசைந்துகொடுக்கவில்லை ஹபீபாவின் தந்தை. சிறுமிகளும் விட்டுக் கொடுக்கவில்லை. சட்டவிரோதமாக ஹபீபாவுக்கு நடக்கவிருக்கும் குழந்தைத் திருமணத்தை தடுக்குமாறு மனு ஒன்றை எழுதி, காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர் இந்த சிறுமியர். அதன் பின் காவல்நிலையத்தினர் ஹபீபாவின் தந்தையை எச்சரித்தவுடன் அவரால் தன் திட்டத்தை நிறைவேற்ற முடியவில்லை, குழந்தை திருமணம் தடுக்கப்பட்டது. சிறுமிகள் தங்கள் உரிமையை நிலைநாட்டினர்.

மேலும் விவரங்களுக்கு: BBC NEWS | South Asia | Child wedding ’stopped by pupils’

Add comment ஜூலை 13, 2007

Next Posts Previous Posts


குறிச்சொற்கள்

அன்பு ஆன்மீகம் இயற்கை ஊனம் எரிபொருள் கடவுள் சாதனை சிந்தனைகள் சுயமுன்னேற்றம் சுற்றுச்சூழல் தியானம் நம்பிக்கை நாத்திகம் நித்யானந்தர் புலி பெண்கள் பொறுப்புணர்வு பௌத்தம் மதன் மதுபானம் மனசாட்சி மனம் மனிதநேயம் மனிதன் மருத்துவம் யோகம் விஞ்ஞானம் விவேகானந்தர் வீடியோ Uncategorized

RSS என் புதிய தளம்

RSS என் தலைமையகம்

பதிவுலகம்

Tamil resources

website metrics